மைக்கேல் ஜாக்சன் என்னைப்பாரு என்னைப்பாரு.. டான்ஸ் ஆடும் வாத்து! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
duck
duck

மனிதர்களை போலவே நிறைய செயல்களை செய்ய முடியும் என்பதை விலங்குகள் பலமுறை நிரூபித்து காட்டியுள்ளன.

மனிதர்களை போலவே விலங்குகளால் பேச முடியும், மகிழ்ச்சி மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகளைக் கூட காட்ட முடியும் என்பது நமக்கு தெரியும். இதுதொடர்பான பல வீடியோக்களையும் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் அவர்கள் மனிதர்களைப் போல நடனமாட முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் சாதாரண நடனம் அல்ல. மைக்கேல் ஜாக்சனைப் போல.. ஆம்.. உண்மை தான்.. வாத்து ஒன்று மைக்கேல் ஜாக்சன் போல நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது..

இந்த 20 வினாடி வீடியோவில், ஏரியின் அருகில் ஒரு வாத்து கூட்டம் காணப்படுகிறது. அதில் ஒரு வாத்து மட்டும், தன் இறக்கைகளை அசைத்து, தன் கால்களை தள்ளி அசத்தலாக டான்ஸ் ஆடுகிறது..

குறிப்பிடத்தக்க வகையில், moonwalk எனப்படும் உடலை பின்னோக்கி நகர்த்தி அந்த வாத்து நடனமாடுகிறது.. இந்த moonwalk நடன அசைவு மைக்கேல் ஜாக்சனின் பிரத்யேக நடன முறையாகும்.

அதற்கேற்றார் போல, இந்த வாத்தின் நடனத்திற்கு மைக்கேல் ஜாஸ்க்சனின் “பீட் இட்” பாடல், இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வாத்து நடனமாடும் போது மற்ற வாத்துகள் அதனை கூர்ந்து கவனிப்பதை பார்க்க முடிகிறது..

இந்த ட்வீட்டை கர்னல் டிபிகே பிள்ளை என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்: தனது பதிவில் “மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக. மைக்கேல் ஜாக்சன் இங்கே இருக்கிறார். ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும், சிறந்த நடனம், சொல்ல வார்த்தையே இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.