பழம்பெரும் ஐராவதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த மக்கள் கோரிக்கை!

Iravathiswarar Temple 2
Iravathiswarar Temple 2

ஐராவதீஸ்வரர் கோவிலினை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோவிலில் சிவன் சன்னதி, தெய்வநாயகி அம்பாள், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், குபேரலிங்கம், துர்க்கை போன்ற சன்னதிகள் இருக்கின்றது.

Iravathiswarar Temple 1
Iravathiswarar Temple 1

மேலும் 4 பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்திமண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் கலைநுணுக்க வேலைபாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது.

இங்கு தினசரி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இவ்வாறு வருபவர்கள் கோவிலில் உள்ள கலைத்திறன்களை ரசித்து பார்ப்பார்கள்.

இந்த கோவிலை தொல்லியல்துறையினர் பராமரித்து வருகின்றனர். கடந்த 2004-ஆம் வருடம் இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இது நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Iravathiswarar Temple 1
Iravathiswarar Temple 1

ஆனால் பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்வது ஆகம விதி ஆகும். எனினும் 17 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு நடத்தப்படாமல் இருக்கிறது.

ஆகவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இறைவழிபாடு மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியபோது “தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும். இதற்கு முன்பு மத்திய அரசின் அனுமதியுடன் இந்த கோவிலுக்கு என ஆகம முறைப்படி செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்பிற்காக தஞ்சை சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் உள்ளது.

Iravathiswarar Temple 3 1
Iravathiswarar Temple 3 1

மேலும் மத்திய அரசால் பாதுகாப்பிற்காக எடுத்துச் சென்ற ஆகம கற்சிலைகள் எல்லாம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. அந்த சிலைகள் எல்லாம் வழிபாட்டிற்கு சரியானது இல்லை. இதனால் அந்த சிலைகளை புதுப்பித்து திரும்பவும் இந்த கோவிலுக்கு கொண்டு வரவேண்டும்.

இந்த கோவிலின் முன் நர்த்தன விநாயகர் சிலை சேதம் அடைந்ததால் அது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆகம முறையின்படி விநாயகர் சிலை புதுப்பித்து வைக்க வேண்டும். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories