நல்லா இருந்த இளையராஜாவும்; அந்த நாலு ‘ஊத’கக்காரர்களும்!

ilayaraja
ilayaraja

‘அப்பிராணி’ என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

இந்த வார்த்தைக்கு சரியான எடுத்துக்காட்டாக இருந்தவர் அன்றைய இளையராஜா. ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார். சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா. அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன் பேசினார். பரிவுடன் நடந்து கொண்டார். கேட்டபோதெல்லாம் பேட்டிகள் கொடுத்தார். விதம் விதமாய் போட்டோக்கள் எடுக்க, வித்தியாசமான போஸ்களும் கூட கொடுத்தார்.

ஆனால் அப்படி அப்பிராணியாய் இருந்த அந்த இளையராஜாவை அடியோடு மாற்றியது, ஒரு சில பத்திரிகைக்காரர்கள்தான். உள்ளொன்று வைத்து புறமொன்று கேட்டார்கள். அதில் உள்ளுக்குள் ஒளிந்திருந்த சூழ்ச்சி புரியாமல் வெள்ளந்தியாய் அவர் சொன்ன பதில்களை, வில்லங்கமாக மாற்றிப் போட்டார்கள். வேறு விதமாய் அர்த்தம் கொடுத்தார்கள்.

அதில் உச்சகட்டமாக அமைந்தது 1989 இல் வெளிவந்த ஒரு பத்திரிகை பேட்டி. இளையராஜாவிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்:

“நீங்கள் எது இசை என்று எவ்வாறு வரையறை செய்கிறீர்கள் ?”

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இந்தக் கேள்விக்கு வார்த்தைகள் எதையும் கட்டுப்படுத்தாமல், தன் மனதில் பட்டதை எல்லாம் சொன்னார் இளையராஜா.

“இசை என்பது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை. கச்சேரி மேடைகளில் கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடும் ராகங்களில் மட்டுமே இசை இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்.

இந்த உலகத்தில் எல்லாவற்றிலும் ஒரு இசை இருக்கிறது. ஒரு ராகம் இருக்கிறது. ஒரு தாளம் இருக்கிறது. ஒரு மழைத்துளி மண்ணில் விழுவதில் இசை இருக்கிறது. ஒரு குழந்தையின் நடையிலும் இசை இருக்கிறது. ஓடும் நதியில் ஒரு இசை இருக்கிறது. ஓங்கி விழும் அருவி சத்தத்தில் கூட சங்கீதம் இருக்கிறது.

அவ்வளவு ஏன் ? நாய்கள் ஊளையிடும் சத்தத்தில் கூட ஒரு இசை இருக்கிறது. கவனித்துப் பார்த்தால் உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் இசை இருக்கிறது.”

இதுதான் இளையராஜா சொன்ன பதில். ஆனால் இந்த பதில் மூலமாக ஒரு எரிமலை வெடிக்கப் போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியாது.

அடுத்த வாரம் வெளி வந்த ஒரு சில பத்திரிகைகளில், இளையராஜாவின் பேட்டிக்கு இப்படி ஒரு தலைப்பு கொடுத்திருந்தார்கள்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

“நாய்கள் ஊளையிடுவதும், கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடுவதும் எனக்கு ஒன்றுதான்.”

பரபரப்பான அந்த பேட்டியை படித்தவர்கள் அதிர்ந்து போனார்கள். தொடர்ந்து இப்படி போனது அந்தப் பேட்டி.

“ஒரு நாய் ஊளையிடுவதைக் கேட்டுப் பாருங்கள். அதில் ஸ்வரப் பிரஸ்தானம் இல்லையா? ஒரு நாய் ஊளையிடுவதற்கும் வித்வான்கள் பாடுவதற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. உண்மையில் வெவ்வேறு சமயங்களில் ஒரு நாய் என்னென்ன ராகங்களில் குரைக்கிறது என்பதை இசைக் குறிப்புகளாக எழுத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இது என் எண்ணத்தை நிரூப்பிப்பதாக இருக்கிறது. ஒலியன்றி வேறல்ல இசை.”

இப்படிச் சொல்லியிருந்தார் இளையராஜா.

கொதித்துப் போனார்கள் கர்நாடக சங்கீத வித்வான்கள். எதிர்ப்புகள் எரிமலையாக சீறி வெடித்தன. ஆவேசமான அர்ச்சனைகள், அடுக்கடுக்காய் பிரச்னைகள். இசையைத் தவிர எதையும் நினைக்காத இளையராஜா இந்த வசைச் சொற்களால் வாடிப் போனார். வருத்தம் அடைந்தார்.

அப்போதுதான் தீர்க்கமாகச் சிந்தித்து தெளிவான அந்த முடிவை எடுத்தார். இனி தேவை இல்லாமல் மீடியாக்காரர்களிடம் பேசுவதில்லை. இன்னொன்றையும் கூட அவர் புரிந்து கொண்டார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

இசை அமைப்பது மட்டும் கலை அல்ல. சொற்களைக் கையாளுதலும் கூட ஒரு கலைதான்.

ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். வெல்லும் சொற்களையே எப்பொழுதும் சொல்வோம்.

  • ஜான் ஆசீர் செல்லையா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories