நிவாரணம் கேட்டு காதலியின் தந்தைக்கு கடிதம் எழுதிய இளைஞர்! வைரல்!

Published:

lovers4
lovers4

காதல் புனிதமானது என்று பலர் சொல்லி கேள்விபட்டிருப்போம், ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் காதல் பலருக்கு வெறும் விளையாட்டாக மாறிவிட்டது

ஒரே நேரத்தில் பல காதல், போர் அடித்தால் பேச்சு துணைக்கு காதல் என்று பல விளையாட்டான காதல்கள் உள்ளன. காரணமே இல்லாமல் காதலை கழட்டி விடும் காதலர்கள் பலர் உள்ளனர்.

கழட்டி விடும் காதலை வைத்தே நிறைய பாடல்கள் வெளியிட்டு சம்பாதிப்பவர்கள் அநேகம். உண்மையான காதலர்கள் சிலர், தனது காதலியோ அல்லது காதாலனோ பிரிந்து விட்டால் மிகுந்த மனவேதனை அடைகின்றனர்.

இதற்காக தற்கொலை செய்து கொள்பவர்களும் அதிகம். அந்த வகையில் தனது காதலியை பிரிந்த வலியில் இளைஞர் செய்த காரியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இளைஞர் ஒருவர் தனது காதலி பிரிந்து விட்டதால், “காதலனுக்கு நிவாரணம்” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. பெயர் குறிப்பிடப்படாத அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
letter 1
letter 1

எனது காதலியின் பெற்றோருக்கு, நான் அறியாமல் செய்த தவறு என்னவென்றால், கடந்த ஐந்து வருடங்களாக (2016 – 2021) உங்களது மகளை காதலித்தது தான். எனது காதலை உங்களது மகள் தற்போது ஏற்க மறுத்துவிட்டாள். அதனால் உங்களது மகளிடம் இருந்து எனக்குறிய நஷ்ட ஈடை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பெண்ணுக்கு செய்த செலவு விபரங்கள்: உடைகள் – 50,000, சிகை அலங்காரம் – 30,000, தொலைபேசி கட்டணம் – 1,20,000, முகப்பூச்சி மற்றும் வாசனை திரவியங்கள் – 42,000, பிரத்யேக வகுப்புகள்(மகள் சென்றது) – 1,44,000, காதல் பரிசுகள் – 50,000, எரிபொருள் – 1,20,000, வாகன உதிரிபாகங்கள் செலவு -1,00,000.

காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையாகி நான் செய்த செலவுகள்: புகையிலை – 12,000, பீடி, சிகரெட் – 59,400, சாராயம் – 84,000. மொத்தம் – 1,55,400
5 வருடத்திற்கான மொத்த செலவு – 7,21,400

உங்களது மகளை காதலித்ததால் ஏற்பட்ட மொத்த செலவை குறிப்பிட்ட மாதத்திற்குள் வழங்கி என் மன அழுத்தத்தை குறைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

“நினைத்தால் கவலை கதைத்தால் மனவருத்தம்” NO Love! இந்த கடிதம் இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

Related articles

Recent articles

spot_img