நேர மாற்றம்: தெற்கு இரயில்வே அறிவிப்பு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
train 1 - 2026

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ரயில் சேவை மக்களின் தேவையை பொறுத்து மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

தற்போது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் தெற்கு ரயில்வே ரயில் நேரத்தில் மாற்றம் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் எர்ணாகுளத்தில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரயில் சேவை மாற்றப்பட்டு உள்ளது.அதன்படி சென்னை எழும்பூர்-குருவாயூர் (16127) இடையே டிசம்பர் 29 ம் தேதி காலை 9 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாகுளம்-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

இந்த ரயில் சென்னை எழும்பூர்- எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.