ஒப்போ கே10 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!

Published:

Oppo K10 - 2026

ஒப்போ நிறுவனம் வரும் மார்ச் 23-ம் தேதி புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் சிப்செட் வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என ஒப்போ நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ கே10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Related articles

Recent articles

spot_img