202205111043050084 A golden chariot floating in the sea SECVPF - 2026

ஆந்திரா ஆழ்கடலில் மிதந்து வந்த தேர்‌..

அடடே... அப்படியா?

ஆந்திரா ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மிதந்து வந்த தங்க நிற தேர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், சுன்னப்பள்ளி மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தங்க நிறத்திலான கோவில் கடலில் மிதந்து கொண்டு இருந்தது. இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த மீனவர்கள் கடலில் மிதந்து வந்த கோவில் அருகே சென்று பார்த்தபோது தங்க முலாம் பூசப்பட்ட தேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மீனவர்கள் அந்த தேரை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு நேற்று மாலை சுன்னப்பள்ளி கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படை அதிகாரிகள் படகிலிருந்து தேரை மீட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது தேரின் மீது வெளிநாட்டு மொழியில் எழுதப்பட்டு இருந்தது. அந்த எழுத்துக்கள் தாய்லாந்து, ஜப்பான் அல்லது மலேசிய நாட்டு எழுத்துக்களாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் 16.1.22 என எழுதப்பட்டு இருந்தது. அதிகாரிகள் தேரில் எழுதப்பட்டு இருந்த எழுத்துக்கள் எந்த நாட்டை சேர்ந்தது, எந்த நாட்டில் இருந்து தேர் கடலில் மிதந்து வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது ஆந்திராவில் அசானி புயல் கரையை கடப்பதால் கடல் சீற்றம் காரணமாக தேர் ஆந்திரா கடலில் மிதந்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

202205111043050084 A golden chariot floating in the sea SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.