1713173 donkey 2 - 2026

கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரம் செய்யும் மங்களூரு இளைஞர்

அடடே... அப்படியா? சுய முன்னேற்றம்

மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரமும் செய்து வருகிறார் முன்னாள் ஐடி பணியாளரும் இன்னாள் கழுதை பண்ணை உரிமையாளரான ஸ்ரீநிவாஸ் கவுடா.

அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு என்கிறார் மங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் கவுடா.

1713173 donkey 2 - 2026
1713172 donkey 1 - 2026

இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஸ்ரீநிவாஸ் கவுடா கழுதை பண்ணை திறப்பதற்காக தனது ஐடி பணியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது, மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரமும் செய்து வருகிறார் கழுதை பண்ணை உரிமையாளரான ஸ்ரீநிவாஸ் கவுடா.

இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் கவுடா கூறியதாவது:- நான் முன்பு 2020-ம் ஆண்டு வரை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். இது இந்தியாவிலும் கர்நாடகாவிலும் உள்ள முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஆகும். தற்போது எங்களிடம் 20 கழுதைகள் உள்ளன. நான் சுமார் 42 லட்சம் ரூபாய் மூதலீடு செய்துள்ளேன். அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு. கழுதைப்பால் பல நன்மைகள் கொண்ட மருந்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.