‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: தனியரசு கூட தனி அரசு செய்கிறார்..!

அடடே... அப்படியா? சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

Sarkar certi - 2026

தீபாவளிக்கு வெளியானது, நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம். விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் படத்துக்குத்தான் பிரச்னைகள் பல! அது வழக்கம் போல் விஜய் படத்துக்கு ஏற்படுத்தப் படும் பிரச்னைகள்தான் என்று சமாதானம் கூறினாலும், தொடர்ச்சியாக ஒரு நடிகள் இவ்வாறு சர்ச்சைக்குரிய விதத்தில் படத்தில் நடிப்பதும், அதற்கு எதிர்ப்புகள் எழுவதும் வழக்கமான ஒரு சாதாரண செயல்களாகப் பார்க்க முடியவில்லை!

இந்த முறை, கதைத் திருட்டு என்பதில் தொடங்கி, பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது விஜய்யின் சர்கார். அரசின் அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே மிரட்டவும் செய்திருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் குறித்த அவதூறு, இலவச பொருள்களை எரிப்பது போல் வன்முறையைத் தூண்டும் காட்சிகள் என சிலவற்றை முன்வைத்து அமைச்சர்கள் கடும் விமர்சனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதா பெயரை எதிர்மறையாக பயன்படுத்தியிருந்தால் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார். இதுவும் அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.