செருப்பை கொடுத்து அடிக்க சொல்கிறார்… இந்த வேட்பாளர்..! வாக்கும் வாக்குறுதியும்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

compaign with cheppals - 2026

மக்களுக்கு சேவை செய்யவில்லையென்றால் என்னை செருப்பால் அடிங்க… என்று சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார் ஒரு வேட்பாளர்.

ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொரட்டாலா சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஆக்குல ஹனுமந்துலு. இவர் நேற்று ஹனுமந்துலு மெட்டுபள்ளி நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது தன்னுடைய ஆதரவாளர் ஒருவருடன், ஒரு பெட்டி நிறைய செருப்புகள், ராஜினாமா கடித நகல்கள் ஆகியவற்றை உடன் எடுத்து வந்தார். வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செருப்பு, ஒரு ராஜினாமா கடித நகல் ஆகியவற்றை கொடுத்த வாக்கு கேட்டார்.

தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆகிய பின், நான் சரியான முறையில் மக்களுக்கு சேவை செய்யத் தவறினால், நான் இப்போது கொடுக்கும் இதே செருப்பால் என்னை அடித்து, என்னை மக்களுக்கு சேவை செய்ய வையுங்கள்.

என் மீது அதிருப்தி ஏற்பட்டால் கொடுக்கும் ராஜினாமா கடிதத்தை பயன்படுத்தி நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

ஒரு பிஞ்ச செருப்புக்கு பதிலாக ஒரு ஜோடி புது செருப்பு கொடுத்தால் அது பெறுபவருக்கு பயனுள்ளதாகவும் இருக்கும், மேலும் நான் செருப்பாக உங்களுக்கு உழைப்பேன் என்று சொல்லி வாக்கும் கேட்கலாம், அதோடு நாளாகி அந்த பிஞ்ச செருப்பாலயே என்னை அடியுங்கள் என்று சொல்லி மன ரீதியாக வாக்காளரை ஈர்க்கலாம் என்றும் சிலர் யோசனை கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.