புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 16ந்தேதி அதிகாலை கஜா புயல் தாக்கியது இதில் தென்னை மரம் உட்பட வீட்டினை சுற்றியிருந்த மரங்கள் அடியோடு சாய்ந்தது.மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தது.விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதபபட்ட தென்னை மரம் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் சொல்லமுடியாத துயரில் உள்ளனர்.இந்நிலையில் காங்.மாநில தலைவர் திருநாவுக்கரசர் 18ந்தேதி வல்லவாரி கிராமத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தென்னந்தோப்பிற்கே சென்று ஆறுதல் கூறினார்.அப்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடராக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனே அரசு வழங்கவேண்டும் என்றார்.அப்போது விவசாயிகள் கட்சி தொண்டர்கள் உடனிருந்தனர் வல்லவாரி கிராமத்தை தொடர்ந்து அறந்தாங்கி ஆவுடையார்கோயில் மணமேல்குடி ஆகிய 3 தாலுகாவை சேர்ந்த பல கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அறந்தாங்கி அருகே வல்லவாரி கிராமத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பார்வையிட்டார்.
Popular Categories



