மன உளைச்சல் என்று சொல்பவன் போலீஸ்காரனே இல்லை: பொன் மாணிக்கவேல் பகீர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
pon manikkavel - 2026
File picture

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் சிலர் பொன் மாணிக்கவேல் மீது குற்றம்சாட்டினர். தங்களை பொய்யான வகையில் குறிப்பிட்ட சிலர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கட்டாயப் படுத்தியதாகவும் தங்களுக்கு மன உளைச்சல் கொடுப்பதாகவும் டிஜிபியிடம் காவல்துறை அதிகாரிகள் புகார் கொடுத்தனர்

இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து  செய்தியாளர்களிடம் பொன் மாணிக்கவேல் விளக்கம் அளித்துள்ளார்…

தம் மீது புகார் கூறிய 21 பேரும் கடந்த 400 நாட்களில் ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியபோது….

என் மீது புகார் கூறிய 21 பேரும் ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை 

என் மீது புகார் கூறிய 21 பேரும் ஒரு நபரை கூட கைது செய்யவில்லை 

என் மீது புகார் கூறியவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது

4 காவலர்களை பயன்படுத்தி 47 பேரை கைது செய்துள்ளேன்

எனக்கு வழங்கப்பட்ட டி.எஸ்.பிக்கள், ஏ.டி.எஸ்.பிக்கள் மூலமாக நான் இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லை

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பணி மாற்றம் கேட்டு என்னை யாரும் அணுகவில்லை

பணி மாறுதல் கேட்டு மின்னஞ்சல் மூலமாக கூட யாரும் என்னை அணுகவில்லை 

6 மாத பணிக்காலம் முடிந்த பிறகு மூன்று பேர் மட்டுமே தங்களை விடுவிக்கக் கோரினர் 

வழக்கின் நிலை அறிக்கையை கொடுத்துவிட்டு செல்வதாக இருந்தால் யாரையும் நான் கட்டாயப்படுத்த முடியாது

அவதூறாகப் பேசுவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது என்பதெல்லாம் பழங்கால குற்றச்சாட்டு

எனக்கு எதிராக யாரும் திரும்புவதாக கருதவில்லை, ஆனாலும் தனி ஆளாக போராடுகிறேன் 

கடமைகளை செய்து கொடுக்காமல் யாரையும் பணியில் இருந்து விடுவிக்க முடியாது 

எனக்கு எதிரான வழக்கில் பின்னடைவு ஏற்பட்டதால் பிரச்னை கொடுக்கிறார்கள் 

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கையை நாங்கள் தான் பதிவு செய்கிறோம்

என்னுடன் பணியாற்ற விரும்புபவர்களை வைத்து தொடர்ந்து பணியாற்றுவேன்

அடிப்படை ஆதாரம் இல்லாமல் நான் எப்ஐஆர் போடச் சொல்வதாக கூறியவர்களுக்கு அடிப்படை சட்ட அறிவு இல்லை

மாற்று அதிகாரிகளை கொடுக்குமாறு உள்துறை செயலாளருக்கு ஒரே வாரத்தில் 10 மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளேன்

மன உளைச்சல் என்று கூறும் காவல் அதிகாரி போலீஸ் வேலைக்கு தகுதியற்றவர் 

பணியில் மன உளைச்சல் என்று கூறுபவர் போலீசே இல்லை

மூன்று பேர் இருந்தால் கூட போதும், நான் தொடர்ந்து பணியாற்றுவேன் 

நல்ல எண்ணங்களும், நல்ல ஆன்மிகமும் தான் என்னை ஆட்டிப்படைக்கிறது …

-என்று கூறினார் பொன் மாணிக்கவேல்

2 thoughts on “மன உளைச்சல் என்று சொல்பவன் போலீஸ்காரனே இல்லை: பொன் மாணிக்கவேல் பகீர்!”

  1. இவர் சொல்வது முற்றிலும் ஞாயமாகத்தானிருக்கு, ஏனெனில் இவர் ஒரு உண்மையான காவல்துறை அதிகாரி என்பதற்கு, ஏகப்பட்ட உதாரணங்களிருக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.