சபரிமலைக்கு மாலை அணிந்து விட்டு… உள்ளூரில் மாலையைக் கழற்றும் பக்தர்கள்!

Published:

sabarimala devottees - 2026

சபரிமலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் அராஜகங்களை அடுத்து கேரளத்தின் சில பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அன்பர்கள் தங்கள் உள்ளூர் கோயில்களிலேயே சபரிமலைக்கு போட்ட மாலையை கழற்றி அங்குள்ள ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர்

இதுகுறித்து ஆலப்பாடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் கூறுகையில் தாங்கள் சபரிமலைக்கு காலங்காலமாக சென்று வந்ததாகவும் மாலையணிந்து விரதமிருந்து மகிழ்ச்சியுடன் சென்று வந்ததாகவும் ஆனால் தற்போது நிலவும் சூழ்நிலை தங்களுக்கு மனவருத்தத்தை தருவதாகவும் கூறி உள்ளனர்

மேலும் தங்கள் மனதில் சபரிமலை ஐயன் என்றென்றும் குடியிருப்பார் என்றும் இந்த முறை தாங்கள் சபரிமலைக்கு செல்லப்போவதில்லை என்றும் கூறி மாலையை அங்கேயே கழற்றி ஐயனை தரிசித்து செல்கின்றனர்

ஆனால் இந்த தகவலை பகிர்ந்து வரும் பலரும் இது கம்யூனிச குண்டர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமைந்துவிடும்… நாம் அதிக அளவில் சபரிமலைக்கு செல்ல வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

https://twitter.com/surnell/status/1080671919471583233?s=09
ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img