சபரிமலைக்கு செல்ல எண்ணும் பெண்ணின் காலை வெட்டுங்கள்: கனகதுர்காவின் மாமியார் ஆவேசம்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
kanakadurga mother in law1 horz - 2026

சபரிமலைக்குச் சென்று அதன் ஆசாரங்களை கேரள கம்யூனிஸ அரசு அழிப்பதற்கு கருவியாக செயல்பட்ட, கனகதுர்கா என்ற பெண்ணின் மாமியார் ஊடகங்களில் அளித்த பேட்டி இப்போது விவாதப் பொருளாகி உள்ளது.

சபரிமலைக்குச் செல்லும் பெண்ணின் காலை வெட்டுங்கள் என்று கோபமாகக் கூறியுள்ளார் அவர். தனது வீட்டுக்கு இன்று காலை வந்திருந்த மருமகள் கனகதுர்காவை மரக்கட்டையால் அடித்ததாகவும், அதனால் காயமுற்ற கனகதுர்கா உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே அவர்கள் வீட்டுக்கு வந்து, விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

kanakadurga mother in law2 - 2026

இந்நிலையில், கனகதுர்காவின் மாமியார் ஊடகங்களில் அளித்த பேட்டியில், கற்பழித்த பாதிரியாரை கண்டிக்க துப்பில்லாத அரசாங்கம் ஐயப்பனை அழிக்க நினைக்கிறது! இனி இவளைப் (கனகதுர்கா, பிந்து போல்) போல யாராவது சபரி மலைக்குச் செல்ல நினைத்தால் அவர்களது காலை வெட்டுங்கள்… என்று கூறியிருந்தார்.

மேலும், நாங்கள் பரம்பரையாக கம்யூனிஸ்ட் கட்சிக்கே வாக்களித்து வந்தோம்! என் கணவரை இங்கே எல்லாருக்கும் தெரியும்! ஆனால் இன்று எங்கள் நாட்டிலேயே எங்கள் கலாச்சாரத்தை அழிக்க இந்த அரசு துடிக்கிறது. இதுதான் எங்களுக்கு இந்த நாட்டில் கொடுக்கப் பட்ட தண்டனையா? அந்த பாதிரியார் கன்னியாஸ்திரியை கற்பழித்த வழக்கில் அவரைக் கைது செய்யாமல் வெளியில் விட்டது இந்த அரசு.

ஐயப்பன் கோவிலுக்குள் என் மருமகள் போல் பெண்களை அனுப்பி ஐயப்பனை அழிக்க நினைக்கிறார்கள்! இப்படி யார் நினைத்தாலும் எங்கள் ஐயப்பனை அழிக்க முடியாது. மக்களிடம் ஒன்று சொல்கிறேன் இனி நம் குடும்பங்களில் யாராவது இப்படி திமிர் எடுத்து ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல நினைத்தால் அவர்களின் காலை வெட்டுங்கள் என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், இது ஒரு நாடகம் என்கிறார்கள் சிலர். மற்றவர்களின் தாக்குதலிலிருந்து மருமகளைக் காப்பாற்றப் போட்ட நாடகம் என்றும் கருத்துகள் உலா வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.