காஞ்சி வரதப்பா.. உன் கோயில் கலைப் பொக்கிஷங்கள் காணாமல் போகுதப்பா..!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
kanchipuram varathar temple 1 - 2026

“காஞ்சி வரதப்பா.. உன் கோயிலின் கலைப் பொக்கிஷங்கள் காணாமல் போகுதப்பா… கொஞ்சம் கண்திறந்து பாரப்பா ” – இப்படி ஒரு கோரிக்கையை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினர்.

காஞ்சி கோயில் கலைப் பொக்கிஷங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்று பகீர் செய்தியைப் பகிர்ந்தார் இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ராம. ரவிக்குமார்.

இது குறித்து அவர் நம்மிடம் தெரிவித்தவை…

காஞ்சிபுரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில். காஞ்சி வரதர் திருக்கோயிலில் கலைப் பொக்கிஷங்களாக எத்தனையோ சிற்ப வேலைப்பாடுகள் சிறப்பாக அமைந்திருக்கிறது .

பாசுரங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த திவ்விய திருத் தலத்தில், திருக்குளத்தின் அருகில் கண்ட காட்சி மனதை வேதனை அடையச் செய்தது.

kanchi varathar temple2 - 2026

பாருங்கள் எவ்வளவு அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கல்மண்டபம் மண்ணுக்குள் புதைந்து காணாமல் போகும் அதிசயத்தை காஞ்சி வரதர் கோவிலில் மட்டுமே காண முடியும். இதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்? அறநிலையத்துறை துறையா? அவர்கள் மட்டும் குற்றவாளியா?

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்? இந்து முன்னணி அதிருப்தி

கலைப் பொக்கிஷங்களை காட்சி பொருளாக மாற்றி புகைப்படம் எடுத்த பணம் பறிக்கும் பேர்வழிகளே இந்த கலைப்பொக்கிஷம் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது உங்கள் கண்ணில் படவில்லையா ?

பக்தர்களாகிய நமக்கும் இந்த பொறுப்பு இருக்கிறதா? இல்லையா?எல்லாம் பகவான் பார்த்துக்கொள்வார் என்று இறைவன் மீது அனைத்து விஷயங்களையும் திசை திருப்பி விட்டு செல்லும் பேர்வழிகளாக இருக்கின்ற வரை கலைப்பொக்கிஷங்கள் காணாமல் போய்க் கொண்டுதான் இருக்கும்.

கலைப் பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது! ஒவ்வொரு இந்துவும் இதை உணர வேண்டும்!

உணர்வுள்ளவர்கள் திருக்கோவில் சென்று புகார் தெரிவித்து இதை சீர்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்…. என்கிறார் வேதனையுடன்!

1 thought on “காஞ்சி வரதப்பா.. உன் கோயில் கலைப் பொக்கிஷங்கள் காணாமல் போகுதப்பா..!

  1. காஞ்சி கோயிலே பொக்கிஷங்கள் ஆகிய சிற்பங்கள் காணாமல் போவது வேதனை. யார் முயல்வர் பாதுகாப்பிற்கு.

    i

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.