கேபிள் டிவி ஆபரேட்டர்களின் அராஜகம்! உண்மையை தோலுரித்துக் காட்டுவோம்!

Published:

cable tv operators - 2026

வரும் 24ஆம் தேதி ஒட்டுமொத்த கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் 12 மணி நேர ஒளிப்பரப்பை தடைசெய்ய போகின்றார்களாம்! யாரிடம் கட்டணம் வாங்கிக் கொண்டு ஒளிரப்பை நிறுத்துகிறார்கள்?

சின்ன விரிவாக்கம் நூறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கிய நிலையில், அதிகபடியான நிகழ்ச்சியை மக்களுக்கு வழங்க முந்தைய UPA அரசின் டிஜிட்டல் தொழில் நுட்ப ஒளிப்பரப்பிற்கு முட்டுக்கட்டை போட்டதால் உச்ச நீதிமன்றம் TRAI யிடம் தொழில்நுட்ப நடைமுறையை வரைமுறைப் படுத்தக் கூறியது.

அதற்காக நான்கு கட்டங்களாக நவீன தொழில்நுட்ப முறையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது!

இதற்கிடையில் கட்டண சானல்களின் கட்டண நிர்ணயத்தால் மக்களுக்கு இப்போது வழங்குகின்ற கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலவாகும். இது மக்களின் விருப்பத்தை பொருத்தது. இதனால் கட்டண சானல்கள் பாதிக்கப்படுமே தவிர ஆப்ரேட்டர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்

ஆனால் ஒரு சில அமைப்புகள் மோடி அரசுதான் இதற்கு காரணம் என்று பொய்யான தகவலைப் பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறானது !

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

ஆகவே நீங்கள் சார்ந்த அமைப்புகள், நீங்கள் சார்ந்த கட்சித் தலைவர் மூலமாக அரசிடம் தெரிவிக்காமல் போராடுவது இந்திய இறையாண்மை க்கு எதிரானது! ஆகவே போராட்டத்தை கைவிட்டுவிட்டு மக்களோடு ஒன்று சேருங்கள்! அல்லது மக்களே Trai யின் அறிவுரைப் படி யாரைத் தீர்மானிக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்!

அதையும் மீறி மக்களுக்கு இடையூறு செய்தால் அத்தியாவசிய சட்டப்படி மாவட்ட நோடல் அதிகாரி ( ஆட்சியர்)யிடம் நுகர்வோர் என்ற முறையில் புகார் அளித்து கேபிள் உரிமத்தை ரத்து செய்து, புதியதாக வேலையில்லா இளைஞருக்கு கேபிள் உரிமம் வழங்கிட வகை செய்வோம்.

  • நுகர்வோர் பாதுகாப்பு வளையம், சென்னை

Related articles

Recent articles

spot_img