குட்டு வெளிப்பட்ட கர்நாடக அரசு! சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற யோசனை!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
DIG Rupa SASIKALA - 2026

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா, வேறு சிறைக்கு மாற்றப் படக் கூடும் என்று தெரிகிறது.

சசிகலா தனது உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோருடன் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் சிறை விதிகளை மீறி, பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியதாகவும் அப்போதைய சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டினார்.

இது தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பியது. இதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட குழு, ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிவித்த்து.

இந்த அறிக்கை குறித்தும் தகவல்கள் வெளியே கசிந்தன. கர்நாடக அரசு அமைத்த ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சிறையின் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டது குறித்து குறிப்பிடப் பட்டிருந்தது. இது, கர்நாடக சிறைத்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது,. எனவே, இந்தப் பிரச்னையை சமாளிக்க, வேறு ஒரு சிறைக்கு சசிகலாவை மாற்றலாமா என்று கர்நாடக அரசு அலோசித்து வருகிறதாம். மேலும், பெங்களூரில் இருப்பதால், அடிக்கடி தமிழக அரசியல்வாதிகள் விசிட் அடித்துக் கொண்டிருப்பதால், வேறு வடக்குப் பக்கம் மாற்ற யோசித்து வருவதாகக் கூறப் படுகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.