கிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் சினி நியூஸ்
lakshmi ramakrishnan - 2026

கிறிஸ்துவ இஸ்லாமிய சகோதரர்களின் மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல், அவர்களும் என் மதத்தை அவ்வாறு மதிக்க வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன் என்று கருத்துப் பதிவு செய்துள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

மேலும், உங்கள் வீட்டு பெண்களை இப்படி வரைவீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரைப்பட இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் லயோலா கல்லூரியில் காட்சிப் படுத்தப்பட்ட ஓவியங்கள் குறித்து தனது கண்டனத்தை டிவிட்டர் பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

பாரதமாதாவை அவமானப்படுத்தியிருப்பதை எந்த இந்தியானாலும் ஏற்றுக்கொள்ள முடியாது! தாய் நாட்டை அவமானப்படுத்துவதும் மதத்தை அவமானப் படுத்துவதும் ஒன்றுதான்,
இதுபோல் தங்கள் வீட்டு பெண்களை நீங்கள் வரைவீர்களா என்று கடும் கோபத்துடன் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த கருத்துகளில் நான் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சகோதரர்களின் மத அடையாளங்களை எக்காரணத்தைக் கொண்டும் எதற்கும் பயன்படுத்தியதில்லை! அவர்களது மத நம்பிக்கைகளை நான் மதிக்கிறேன்! அதேபோன்ற மரியாதைத்தான் நானும் என் மதத்தின் மீது அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்! என்று கூறியுள்ளார்

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

இன்னொரு பதிவில் நீங்கள் ஏதாவது கட்சியுடனும் அல்லது குழுவுடனும் பிரச்சனைகள் கொண்டிருந்தால் அதை தனியாக எதிர்கொள்ளுங்கள்! பொதுவான மக்களின் நம்பிக்கைகளை கேவலப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.