‘ராகுல்’ வழியில் காங்கிரஸாரின் ‘டகால்டி’ வேலை! சென்னைவாசிகள் ‘உஷார்’!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
vadivelu - 2026

கண்ணை மூடிக் கொண்டு பொய்களை அவிழ்த்து விட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் தனக்கென அரசியலில் ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது போல், காங்கிரஸ் தொண்டர்களும் இப்பொது ‘முயற்சி’ செய்து வருகிறார்கள்!

மக்களுக்கு ஆசை வார்த்தைகள் சொல்லி அவர்களிடம் இருந்து கிரெடிட் கார்டு தகவல்களைக் கேட்கும் ஏமாற்றுக் காரர்களைப் போல், ஏதோ பின்னாளில் மக்களுக்கு மானியங்கள் கொடுக்கப் போகிறோம் என்று சொல்லி, தனிப்பட்ட தாகவல்களைக் கேட்டு வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். அப்படியே, கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையையும் செய்து வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பாலாஜி நகரில் தனியார் குடியிருப்புப் பகுதியில்தான் இந்தக் கூத்து நடைபெற்று வருகிறது. அங்கே வந்த் இளைஞர்கள் சிலர் பொதுமக்களிடம் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண், அவர்களின் ஆதார் அட்டை எண், முகவரி அடையாளச் சான்று, மொபைல் போன் எண் உள்ளிட்ட தகவல்களைப் பெற்று வருகின்றனர். இவற்றை எல்லாம் அந்த இளைஞர்கள் தகவல்களாகக் கேட்ட போது, அங்கிருந்தவர்கள், ஏன் இந்தத் தகவல்களைக் கேட்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள், நாங்கள் எல்லோரும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடும். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதற்காகவும், மானியம் உள்ளிட்டவற்றை வழங்குவதாகவும் கூறியுள்ளார். அதனால் இப்போதே மக்களிடம் இருந்து இந்தத் தகவல்களைப் பெற்று வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால், இப்படி எல்லாம் ராகுல் காந்தி எதுவும் அறிவிக்க வில்லையே என்று சிலர் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், இது பொதுவில் சொல்லக் கூடிய விஷயமில்லை! கட்சியில் இருப்பவர்களுக்கு மட்டும் தற்போது குறிப்பு அனுப்பப் பட்டுள்ளது. விரைவில் ராகுல் காந்தி இதனை பின்னர் வெளிப்படையாக அறிவிப்பார்… என்று கூறியுள்ளனர் அந்த இளைஞர்கள்.

ஆனால் ஏற்கெனவே கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு, மொபைல் போன் இவை மூலம் நிதி முறைகேடுகள் அதிகம் நடந்து வரும் நிலையில், பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு மேலும் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமே என்று சிலர் அங்கலாய்த்தனர்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர்களிடம் சிலர் இந்த விவகாரம் குறித்து கவனத்துகுக் கொண்டு சென்றுள்ளனர். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் இது போன்ற எந்த அறிவிப்பும் கட்சியின் மேல்மட்டத்தில் இருந்து வரவில்லை என்றனர்.

மேலும், கட்சியில் இப்போது உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு சக்தி அண்ட்ராய்ட் ஆப் உள்ளது. இதன் மூலம் உறுப்பினர்களைச் சேர்ப்பவர்களுக்கு கட்சியில் ஏதாவது பொறுப்பு கிடைக்கும் என்பதால், இளைஞர்கள் சிலர் இவ்வாறு ஈடுபட்டிருக்கலாம். அதற்காக ஒரு பொய்யான காரணத்தைக் கூறி இப்படி செயல்பட்டிருக்கலாம். ஆனால் இது மிகவும் தவறானது. இப்படி யாராவது தனிப்பட்ட தகவல்களை சேகரித்தால் காவல் துறையில் புகார் கொடுங்கள் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.