ரெண்டு மூணு பொண்டாட்டி வைப்பாட்டின்னு இருக்கறவனுக்கு ‘ஒரே ஒரு’ பொண்டாட்டியின் மகத்துவம் தெரியுமா?!

Published:

kasturi2 - 2026

திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின் இஸ்லாமிய திருமண வரவேற்பு ஒன்றுக்குச் சென்றுவிட்டு, அங்கே இந்துக்களின் திருமணச் சடங்கை இழிவுபடுத்திப் பேசினார். இது சமூக அளவில் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

ஸ்டானின் பேச்சு விளைவாக, இப்போது பலரும் இந்து திருமண மந்திரங்கள், சடங்குகளின் உட்பொருளையும் தத்துவத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்து திருமண முறை எவ்வளவு உயர்வானது என்று பொருள் பட பலவித கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றனர்.

இந்த வகையில், நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரி சங்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதில்…

ஆகம திருமண மந்திரங்களில் ஆபாசம் உள்ளது என்று அரசியல் விஷமிகள் ஆதாயத்துக்காக செய்யும் பிரச்சாரம் எந்த பகுத்தறிவில் சேருமோ தெரியவில்லை. ‘காவலன்’ என்ற சொல்லை ‘ கணவன்’ என பொருள்படுத்தும் வக்கிரத்தை எங்கு நோவது? அது சரி, ரெண்டு மூன்று பொண்டாட்டி, அதற்கு மேல் வைப்பாட்டி என்ற வாழ்வியலை கடைபிடிப்பவர்களுக்கு எல்லா ஆண் பெண் உறவும் தாம்பத்ய உறவாகவே தோன்றுவதில் என்ன வியப்பு?

வைதிக திருமண மந்திரங்கள் சமத்துவத்தை, திருமண உறவின் மகத்துவத்தை, வாழ்க்கையின் தத்துவத்தை மிக அருமையாக விவரிப்பவை. இதில் சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்ட செய்யுள்களை மிக அழகாக விளக்கியுள்ளார் தமிழ் ஆர்வலர் ஒருவர். படித்து பயன் பெறுங்கள்… என்று கூறியுள்ளார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img