மாலை 5 மணிக்கு நாராயணசாமியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் கிரண் பேடி!

Published:

kiranbedi2 - 2026

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை முன்னர் இன்று 6-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி! இந்நிலையில் அவர் ஆளுநர் கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்கிறார். மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிரண் பேடி நேரம் ஒதுக்கியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு எதிராக கடந்த 13ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 6-வது நாளாக முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று அவரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆளுநர் கிரண்பேடி அழைத்தும், சில நிபந்தனைகளை முதல்வர் நாராயணசாமி விதித்ததால், பேச்சுவார்த்தைக்கு இயலாமல் போனது. இந்நிலையில் நிபந்தனைகளை தளர்த்திக் கொண்டு, மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வருமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கு அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் சேர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகயில் இரவு விருந்தில் பங்கேற்கவும் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img