போஸ்டருக்கு பதிலா… மாத்தி யோசிச்ச மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்..!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை

10 July02 Jayalalitha - 2026

பேனர் கட்ட நீதிமன்றம் தடை போட்டு விட்டது. ஆனால் இன்று தமிழக முன்னாள் முதல்வர், ’அம்மா’ ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் வேறு! போஸ்டர் போதாது.. பேனர் வைக்க வேண்டும். ஆனால்.. பேனர் கட்ட நீதிமன்றம் தடை போட்டுவிட்டது.

மாற்றி யோசித்தனர் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்! மதுரை மாநகர் முழுவதும் பத்து அடிக்கு ஒரு ஸ்பீக்கரை கட்டிவிட்டனர்.

இப்போது, பேனர்களுக்கு பதிலாக, பத்து அடிக்கு ஒரு ஸ்பீக்கர் அலறுகிறது. ‘சலக்கு சலக்கு சிங்காரி…உன் சரக்கு என்னடி கைகாரின்னு…’ அலறல் சத்தம் காதைப் பிளக்க, தமிழகத்தின் தங்கத் தாரகை புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாளை “உற்சாகமாக”க் கொண்டாடி வருகிறார்கள் அதிமுக., தொண்டர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.