டி20 அரங்கில் சாதனை செய்த ஆப்கன் அணி!

சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

afgan cricketteam - 2026அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் கானி 48 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட் ஜோடி 236 ரன்கள் குவித்தது. ஸஸாய் அதிரடியாய் விளையாடி 62 பந்துகளில் 162 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 16 சிக்ஸர்களையும், 11 பவுண்டரிகளையும் அடித்து மிரட்டினார்.

ஆப்கானிஸ்தான் அணியின் சாதனைகள்….

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அதிகப்பட்ச ஸ்கோர் – 278.
டி20 போட்டிகளில் அதிகபட்ச பார்னர்ஷிப் – 236 (ஸஸாய்-கானி).
தனிப்பட்ட நபரின் அதிகபட்ச சிக்ஸர் – 16.
ஒரு அணியாக அதிகபட்ச சிக்ஸர் – 22.
தனிப்பட்ட நபரின் 2வது அதிகபட்ச ஸ்கோர் – 162 ஸஸாய்.

afgan cricket - 2026

உலக சாதனைகள்…

* ‘டி-20’ல் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
* இதற்கு முன் இலங்கைக்கு எதிரான பல்லேகெலே (2016) போட்டியில் ஆஸ்திரேலியா 263/3 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது.
* உள்ளூர் ‘டி-20’ல் பெங்களூரு அணி (2013), புனே வாரியர்சிற்கு எதிராக 263/5 ரன்கள் எடுத்ததே அதிகம்.

* நேற்று ஹஸ்ரத்துல்லா, உஸ்மான் கனி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தனர்.
* ‘டி-20’ ல் எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது தான்.

* ஒரு ‘டி-20’ போட்டியில் அதிக சிக்சர் அடிக்கப்பட்டது இப்போட்டியில் தான்.
* ஹஸ்ரத்துல்லா (16) உட்பட ஆப்கானிஸ்தான் சார்பில் 22 சிக்சர் அடிக்கப்பட்டன. இதற்கு முன் விண்டீஸ் அணி 21 சிக்சர் (இந்தியா, 2016) அடித்து இருந்தது.

* ஒரே ‘டி-20’ ல் அதிக சிக்சர் அடித்த வீரர் ஹஸ்ரத்துல்லா (16 சிக்சர்).

* சர்வதேச ‘டி-20’ ல் ஒரு வீரர் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக 162 ரன் (ஹஸ்ரத்துல்லா) அமைந்தது.
* முதலிடத்தில் பின்ச் (ஆஸி., 172), மசகட்சா (ஜிம்பாப்வே, 172) உள்ளனர்.
* ஒட்டுமொத்த ‘டி-20’ ல் இது மூன்றாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர். முதலிடத்தில் கெய்ல் (175, பெங்களூரு) உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.