திருவண்ணாமலையில் பன்னிரு திருமுறைத் திருவிழா!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சென்னை லைஃப் ஸ்டைல்

thiruvannamalai thiruviza - 2026திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பன்னிரு திருமுறைத் திருவிழா நடைபெற்று வருகிறது. மூன்று தினங்களுக்கு இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலைத் திருக்கோயில் நான்காம் பிராகாரம் கலை அரங்கில் நேற்று 23.2.19 இன்று 24.2.19 நாளை 25.2.19 என மூன்று நாட்களும் காலை மாலை இருவேளைகளிலும் திருமுறைகள் குறித்து சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது.

முதல் நாள் மாலை 23.2.19 தருமபுர ஆதீன 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளுரை வழங்கினார்.

thiruvannamalai thiruviza2 - 2026

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, டி.வி.எஸ்.இராஜாராம், மா.சின்ராஜ், ப.கண்ணன், கீர்த்திவாசன், கோகுல், பேச்சாளர் இராசாராம், திருப்புகழ் திப்புசுல்தான்,ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் எஸ் ஆர் வி. பாலாஜி மற்றும் ஆன்மீக பெருமக்கள் பலர் திரளாகப் பங்கேற்றனர்.

இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் இன்று காலை10.30க்கு பட்டிமன்ற பேச்சாளர் மாது சிறப்புரை நிகழ்த்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.