இரவு 12.06… நாங்க விழிப்பா இருக்கோம்; தூங்குங்க என டிவிட் போட்ட பாகிஸ்தான் ராணுவம்!

Published:

pakistan defence - 2026

நள்ளிரவு 12.06க்கு நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம் நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள் என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது பாகிஸ்தான் ராணுவம்!

ஆனால், அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியுள்ளன. இதனை பலரும் ரிட்வீட் செய்து வருகின்றனர்.

காஷ்மீர் புல்வாமோ தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறுதி மரியாதை செய்த மோடி சம்பிரதாய நடைமுறைகளுடன் வெறுமனே மலர் வளையம் வைத்துவிட்டு வரவில்லை. அப்போது வீரர்களின் உடல்களைச் சுமந்திருந்த பெட்டிகளை வலம் வந்து வணங்கியதுடன், பாகிஸ்தான் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டது. அவர்கள் வரலாற்றில் மறக்கவே முடியாத படி ஒரு பதிலடி கொடுக்கப் படும் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து, வெளியுறவுத் துறை மூலம் அனைத்து நாடுகளையும் தொடர்பு கொண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எடுத்துக் கூறி, இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகளை மாற்றினார். அப்போது, இஸ்ரேல் வெளிப்படையாக ஒரு வார்த்தை சொன்னது.. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்க அந்நாட்டுக்கு உரிமை உள்ளது என்று கூறியது.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

பின்னர் ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு எதிரான தீர்மானத்தின் போது, பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்மானத்தை சீனாவும் ஆதரித்தது. இப்படி பதில் தாக்குதல் தொடுக்க பன்னிரண்டு நாள் கால அவகாசத்திற்குள் பின்னணி வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட இந்தியா, இன்று காலை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுவதாகவும், பாகிஸ்தான் விழிப்புடன் இருப்பதாகவும் கூறியது பாகிஸ்தான்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img