இளைஞர்களைக் கவர்ந்த அபிநந்தன் மீசை! ஆகுது இப்போ அல்டிமேட் ஃபேஷன்!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

abinandan moustace - 2026

இந்திய பாகிஸ்தான் எல்லையில் விமானத்தில் துரத்திச் சென்று, விமானம் பழுதடைந்த நிலையில் வானில் இருந்து பாராசூட்டில் குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் தவறி விழுந்து, அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கி பின்னர் இந்தியா திரும்பிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனுக்கு இப்போது நாடு முழுதும் ரசிகர் கூட்டம் பெருகிவிட்டது.

பிறந்த ஆண் குழந்தைகளுக்கு அபிநந்தன் பேர் சூட்டியிருக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு அபி என்று பேர் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களூருவில் இளைஞர்கள் அபிநந்தன் வைத்திருக்கும் மீசையின் ஸ்டைலில் மயங்கி, இப்போது அதை அல்டிமேட் ஸ்டைலாக மாற்றி வருகின்றனர்.

abinandan - 2026

தற்போது பலரும் சலூன் கடைகளில் தங்கள் மீசையை மாற்றி அபிநந்தன் ஸ்டைலில் வைத்து வருகின்றனர்.

அபிநந்தன் ஒரு நிஜ ஹீரோ. அவரைபோல் மீசை வைப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறுகின்றனர் அந்த இளைஞர்கள்.

அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர். சென்னையில் படித்தவர். தமிழகத்தின் வீர இளைஞர்கள் போல் மீசையை முறுக்கி நெஞ்சுரம் கொண்டு நின்றவர்.

News Source: ANI

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.