Home அடடே... அப்படியா? பொள்ளாச்சி போன்ற கொடூரங்களில் நீங்கள் தப்ப… இதோ சிறந்த வழிகள்!

பொள்ளாச்சி போன்ற கொடூரங்களில் நீங்கள் தப்ப… இதோ சிறந்த வழிகள்!

hope thought
hope thought

hope thought - 1

பொள்ளாச்சி குற்றக் காரணங்கள் !

குற்றக் காரணத்தின் மூலத்தை தேடிப்பார்த்ததில். காலச்சக்கரம் சுழன்று நம்மை பல நூற்றாண்டிற்கு பின் அழைத்துச் செல்கிறது.

ஒரு மகாபாதகப் பொய்யால் விளைந்த குற்றங்கள் தான் இவைகள்.

பொய்யை தெரிந்துகொள்வதற்கு முன் நம் நாட்டினுடைய உண்மையான பலம் என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம் வாருங்கள்.

பாட்டன், முப்பாட்டன், சின்ன பாட்டன், பெரிய பாட்டன், சின்ன அப்புச்சி, பெரிய அப்புச்சி, சின்ன அம்மிச்சி, பெரிய அம்மிச்சி, சின்ன அப்பாரு, பெரிய அப்பாரு, சின்ன அப்பத்தா, பெரிய அப்பத்தா, எள்ளு தாத்தா, எள்ளு பாட்டி, கொள்ளு தாத்தா, கொள்ளுப் பாட்டி, தாத்தா, பாட்டி, எள்ளு பேரன், எள்ளு பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி, பேரன், பேத்தி, அம்மா, அப்பா, கணவன், மனைவி, அண்ணன், அண்ணி, தம்பி, தங்கச்சி, அக்கா, தாய் மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமனார், மாமியார், மருமகன், மருமகள், ஆண் சம்மந்தி, பெண் சம்மந்தி, நங்கையா, நாத்தனார், கொளுந்தனார், கொளுந்தியா, மாமன், மச்சான், மாப்பிள்ளை, பங்காளி, மச்சினன், மச்சினிச்சி, மச்சாண்டார், சகலை.

என்னங்க பிரம்மித்து பார்க்கிறீர்கள்? இவை எல்லாம் நம் சொந்த பந்தங்களின் உறவுமுறைப் பெயர்கள். இது போல் சொந்த பந்தங்களும், அவர்களை அழகாக பெயரிட்டு அழைப்பதும் உலகிலேயே எந்த இனத்திலும் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்களா ?

நம் சொந்தங்கள் தான் இந்நாட்டின் உண்மையான பலம். நம் சொந்தங்கள் தான் நம்முடைய உண்மையான பலம். இதை எல்லாம் வெள்ளைக்காரன் நன்கு அறிவான்.

அம்மா வாசல் கூட்டி கோலமிட, அப்பா மாடுகளை கவனிக்க, அக்கா தங்கைக்கு சடை பின்னி பூ வைக்க, பேரன் பேத்திக்கு தாத்தா பாடம் புகட்ட, அண்ணன் தம்பி விளையாட, தாய்மாமன் மாப்பிள்ளைகளை குளிப்பாட்ட, அத்தை குழந்தைகளை அலங்காரம் செய்து அழகு பார்க்க, பெரியவர்கள் சமையல் வேலை பார்க்க மற்றவர்கள் அனைவரும் உதவி செய்ய கூட்டுக்குடும்பமாக அனைவரும் தற்சார்பாய் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே உற்பத்தி செய்தும், தயாரித்தும் சொர்க்கபூமியில் ஆனந்தமாய் வாழ்ந்து வந்த அழகான காலம் அது.

இவர்கள் ஒற்றுமையாக இருந்தால் நாம் இங்கு நம்முடைய பொருட்களை எல்லாம் வியாபாரம் செய்ய முடியாது என்று நன்கு அறிந்த உலகவல்லாதிக்க தீய சக்தி தன் தந்திர வேலைகளை மிக அழகாக திட்டமிட்டு அரங்கேற்றத் தொடங்கியது.

என்ன தந்திரங்கள் ?

௧ – மருத்துவப் பொய்
௨ – சினிமா – காதல் திருமண ஊக்குவிப்பு
௩ – சீரியல் – பண்பாடு கலாச்சார சீரழிவு

Thoughtleadership Taming the Ego - 2

முதலில் மருத்துவப்பொய்யை பார்ப்போம்.*

பல நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளைக்காரன் தன் சுயநலத்திற்காக கட்டவிழ்த்தப்பட்ட மகாபாதகப் பொய் இதோ

“சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்கும், பல்வேறு பரம்பரை நோய்கள் தாக்கும்” என்ற மிகப்பெரிய பொய் தான் அது.

ஏன் இப்படி சொன்னார்கள் ? தற்சார்பை உடைத்து சொந்த பந்தங்களை எல்லாம் தந்திரமாக பிரித்துவிட்டால் அவன் இங்கு தாராளமாக கடை விரித்து உட்காரலாம்.

அது மட்டுமல்லாமல் சொந்தத்தை விட்டு கலப்பு திருமணம் செய்தால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு, வீரியம் இல்லாத கலப்பு குழந்தை பிறக்கும் என்பதும் அவனுக்கு நன்றாகத்தெரியும். இதன் மூலம் இவன் மருத்துவ வியாபாரத்தையும் அமோகமாக செய்யலாம்.

ஆதலால் இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டு, அழகாய் நிம்மதியாய் வாழ்ந்து வந்த நம்முடைய உண்மையான பலமான சொந்த பந்தங்கள் அடங்கிய கூட்டுக்குடும்பங்களை பிரித்துவிட்டான். இந்த குள்ள நரி வேலை இந்த நொடி வரை சீரியல் என்னும் சீரழிவு மூலம் அனைவரது இல்லங்களில் அழகாக அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

49 பரம்பரையின் ஜீன்கள் நம் உடலில் இருக்கும். இந்த ஜீன்கள் சொந்தத்தில் திருமணம் செய்யும் போது ஒத்துப்போகும். எந்த பாதிப்பும் நிகழாது. கலப்பு திருமணம் செய்யும் போது ஒத்துப்போகாமல் அதன் வேலையை காட்டத் தொடங்கும். இது குடும்பத்திற்குள் சின்ன சின்ன சண்டையாக தொடங்கி, குழந்தையின்மை என, பின் குடும்பமே நிர்மூலமாகும் அளவிற்கு செல்லும்.

போன தலைமுறை வரை அனைவரும் சொந்தத்திற்குள் தான் திருமணம் செய்தார்கள். வெளியில் திருமணம் செய்தால் அதை குல சாபமாக கருதினார்கள். ஊரைச் சுற்றி 5 கிலோ மீட்டருக்குள் தான் பெண் கொடுப்பார்கள்.

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம் ? எனக்கு தெரிந்து சொந்தத்தில் திருமணம் செய்தவர்களின் குழந்தைகள் மூளை வளர்ச்சி இன்றியும், ஊனமாகவும் பிறந்திருக்கிறதே என்று ! இதற்கு காரணம் சொந்தத்தில் திருமணம் செய்தது அல்ல. அக்குழந்தைக்கு நீங்கள் போட்ட தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்தால் விளைந்த பாதகங்கள் தான் அவைகள்.

உங்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக சொந்தத்தில் திருமணமானவர்களின் குழந்தைகளை வேண்டும் என்றே திட்டமிட்டு வைத்தியம் என்ற பெயரில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். என்னங்க அதிர்ச்சியாய் உள்ளதா ? ஆம், மக்களை நம்ப வைக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் கொடூர பாவிகளே அவர்கள்.

௨ : சினிமா – சொந்தங்கள் பெயரைச் சொல்லி இதெல்லாம் டூப்பு நண்பன் தான் டாப்பு ! போன்ற பாடல்கள், சொந்தங்களை பிரிக்கும் காட்சிகளை திணித்து, காதலை ஊக்குவித்து, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி உள்ளார்கள்.

௩ : சீரியல் – சொல்லவே வேண்டாம், அத்தனை கழிசடைகளும் இதில் அடக்கம். சொந்தங்கள் கேடு செய்வது போல் தவறாக சித்தரித்து காட்டி சொந்த பந்தத்தில் பிளவை ஏற்படுத்தி உள்ளார்கள்.

குற்றக்காரணங்கள் என்று கூறி எதற்கு இதை எல்லாம் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா ? தொடர்பு உண்டு. இதோ

குற்றக் காரணங்கள் !

1 – கூட்டுக்குடும்ப அழிப்பு

2 – தாமதமாகும் திருமணம்

3 – இணையத்தில் மிக எளிதாக கிடைக்கும் ஆபாச படங்கள்

4 – அசிங்கமான திரைப்படங்கள்

5 – அளவிற்கதிமான மது விற்பனை

6 – தவறான பெண் சுதந்திர தூண்டுதல்

7 – கண்மூடித்தனமாக காதலை ஆதரிக்கும் கூட்டும்

8 – அளவிற்கு அதிகமான சுதந்திரம்

9 – மேற்கத்திய கலாச்சார தாக்கங்கள்

10 – பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்காத பெற்றோர்

11 – குடும்ப வாழ்க்கைமுறையை சிதைக்கும் பிரச்சாரங்கள்

12 – கேவலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

13 – பலகீனமாகி வரும் ஆன்மீக ஈடுபாடு, குறையும் இறைநம்பிக்கை

14 – படித்து விட்டு வேலை கிடைக்காமல் சுற்றும் கூட்டம்

15 – பண்பாடு கலாச்சார சீரழிவு செயல்கள்

16 – Android Cell Phone

17 – Social Media கள்

இவை அனைத்தும் குற்றச்செயலுக்கு முக்கிய காரணங்கள். இதில் மிக மிக முக்கியமான காரணம் தாமதமாகும் திருமணம். இதை மட்டும் பார்ப்போம்.

தாமதமாகும் திருமணம் !

இயற்கை விதிப்படி எப்பொழுது ஒரு பெண் வயதிற்கு வருகிறாளோ, அப்பொழுதே அவள் திருமணத்திற்கு உடல் ரீதியாக தயாராகி விட்டாள் என்பது அர்த்தம்.

“காலத்தே பயிர் செய்” என்பது முன்னோர் வாக்கு. இது யாராவது காதில் ஒலித்ததா ? என்பது தெரியவில்லை ! காலதாமத திருமணம் உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். அதை எல்லாம் பின்னர் பார்ப்போம்.

அதற்கு முன், வெளிநாடான அமெரிக்காவில் சட்டப்பூர்வமான திருமண வயதை நீங்கள் அறிவீர்களா ? இதோ

Legal marital age in United States Of America

அதிகபட்சம் (Almost in all states)

ஆண் – 18
பெண் – 16

குறைந்தபட்சம் (In some states)

ஆண் – 14
பெண் – 12

என்னங்க வியப்பாய் உள்ளதா ? ஆம். இது அனைத்தும் அந்நாட்டில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமண வயது.

ஆதாரம் இதோ

https://en.m.wikipedia.org/wiki/Age_of_marriage_in_the_United_States

ஆனால் நம் நாட்டில்

Legal Marital age in India

ஆண் – 21
பெண் – 18

இது இந்தியாவில் சட்டப்பூர்வமான திருமண வயது. குறைந்தபட்சம் இதையாவது கடைப்பிடிக்கிறீர்களா ? கிடையாது.

போன தலைமுறை பெற்றோர்களா நீங்கள் ?

உங்களிடம் ஒரு கேள்வி ?

நீங்கள் எந்த வயதில் திருமணம் செய்தீர்கள் ? ? ?

உங்கள் பிள்ளைகளுக்கு எந்த வயதில் திருமணம் செய்கிறீர்கள் ? ? ?

தமிழகத்தில் மட்டும் பல லட்சம் ஆண் மற்றும் பெண்கள் 30 வயதாகியும் இன்னமும் திருமணமாகாமல் உள்ளார்கள்.

வாருங்கள் அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

திருமணம் தாமதமாக காரணங்கள் !

1 – சொந்தத்தில் திருமணம் செய்தால் பாதிப்பு ஏற்படும் என்னும் மாபெரும் பொய்

2 – Maturity வந்த பின் திருமணம்

3 – படிப்பு முடிந்த பின் திருமணம்

4 – Settle ஆன பின் திருமணம்

5 – சம்பாதித்து கடன் அடைத்த பின் திருமணம்

6 – வீடு கட்டிய பின் திருமணம்

7 – தவறாக பார்க்கப்படும் ஜாதகப்பொருத்தம்

8 – அதிகரிக்கும் Broker கள்

9 – அளவிற்கு அதிகமான Option

10 – Government job உள்ள மாப்பிள்ளை

11 – Foreign மாப்பிள்ளை

12 – IT மாப்பிள்ளை

13 – சினிமா Hero போல் மாப்பிள்ளை சிவப்பாக இருக்க வேண்டும்

14 – சினிமா Heroine போல் பெண்

15 – உடன்பிறப்புகள் அல்லாத ஒரே பெண்

16 – பெண் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற தவறான தூண்டுதல்

17 – மாப்பிள்ளையை முடிவு செய்யும் இடத்தில் பெரியவர்களுக்கு பதில் பெண்கள்.

18 – அளவிற்கு அதிக பவுன் எதிர்பார்ப்பு.

19 – அதிகரிக்கும் திருமண தகவல் இணையதள நிறுவனம்

20 – குடும்ப வாழ்கைமுறையை சிதைக்கும் தவறான பிரச்சாரங்கள்

21 – அனைத்திலும் அளவிற்கு மீறிய பேராசை

22 – சொந்த வீடு வாகனம் உள்ள குடும்பம்

23 – ஏக்கர் கணக்கில் காடு உள்ள குடும்பம் வேண்டும் (ஆனால் மாப்பிள்ளை அதில் வேலை செய்யக்கூடாது, என்னக்கொடும டா)

24 – என் பெண் வேலைக்கு சென்று சம்பாதித்து கொடுக்கிறாள் என்று இன்னும் கொஞ்ச காலம் ஊரில் பெருமை பேசி காலத்தை தள்ளும் பெற்றோர்கள்.

25 – பெற்றோர்களின் சுயநலம், பொறுப்பற்ற தன்மை மற்றும் வெட்டி கௌரவம்.

26 – மாப்பிள்ளை லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்.

இது போன்ற எண்ணிலடங்கா காரணங்களே திருமணம் காலதாமதமாக முக்கிய காரணமாக உள்ளது.

திருமணத்திற்கு முன் Settle ஆக வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. திருமணம் முடித்து கூட செட்டில் ஆகலாம். ஆனால் காலம் தாண்டினால் குழந்தைச்செல்வம் கோடி ரூபாய் கொடுத்து தவமாய் தவமிருந்தாலும் கிடைக்காது என்பது சத்தியம்.

ஜாதகத்தில் 10 பொருத்தம் இருக்க வேண்டி அவசியமே இல்லை. 5 ற்கும் கீழ் குறைவான பொருத்தம் இருந்தாலும் கூட கிரக ரீதியாக சரியான அமைப்பு இருந்தால் திருமணம் செய்யலாம் என்பது ஜோதிட சாஸ்திரம் கூறும் உண்மை. ஆனால் பல ஜோதிடர்களுக்கு இது தெரிவதில்லை. பலர் பொருத்தம் மட்டும் பார்த்து விட்டு Reject செய்து விடுகிறார்கள். சொந்தத்தில் பெரியவர்கள் பார்த்து திருமணம் முடிக்கலாம் என்று சொன்னால் ஜாதகமே பார்க்கத்தேவை இல்லை.

அக்காலத்தில் வாழா வெட்டியாக வந்தால் அடுத்த திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது, அவனோடு தான் வாழ்ந்தாக வேண்டும் ஆனால் இப்பொழுது அடுத்த முகூர்த்தத்திலேயே இரண்டாவது திருமணம் என்ற கண்மூடித்தனமான சுதந்திரம் வழங்கும் பெற்றோர்கள்.

Broker மற்றும் இணைய திருமண தகவல் நிறுவனங்கள் பெருகிவிட்டதால் அளவிற்கு அதிகமான Option ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடைக்கிறது. இது சரி இல்லை இது சரி இல்லை என்றே பல வருடங்கள் ஓடி விடுகிறது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா ? வடகொரியா, தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் Google Search engine ஏ கிடையாது. அவர்கள் நாட்டிற்கு அவர்களாகவே Search engine வைத்திருக்கிறார்கள். அதில் எந்த தவறான காட்சிகளும் வராது. ஆனால் இங்கோ சும்மா Cell Phone கையில் வைத்திருந்தாலே, அசிங்கமான படங்கள் அவ்வப்போது கண் முன்னே வந்து செல்கிறது.

Government job, It, Foreign மாப்பிள்ளைகளுக்கு உள்ள மௌசு, விவசாயி மாப்பிள்ளைக்கோ, சொந்த தொழில் செய்யும் மாப்பிள்ளைக்கோ கிடைப்பதில்லை.

போன்ற பல்வேறு எதிர்ப்பார்ப்புகளும், அளவிற்கு மீறிய பேராசைகளுமே ஆண், பெண் திருமண தாமதத்திற்கு காரணங்கள்.

சரி திருமணம் காலதாமதமாவதற்கும் குற்றச்செயலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை கேட்கிறீர்களா ?

இதோ

காலதாமத திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் !

1 – இத்தனை சுதந்திரம் மற்றும் அனைத்து வசதி வாய்ப்புகளும் கைக்குள் அடங்கி இருந்து, பண்பாடு கலாச்சாரம் சீரழிவு ஏற்பட்டுள்ள இச்சமூகத்தில் வாழும் ஒரு ஆணோ, பெண்ணோ Harmone களை கட்டுப்படுத்த முடியாமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு குற்றச்செயல்களுக்கு தள்ளப்படுகிறார்கள். காலா காலத்தில் நடக்க வேண்டிய திருமணத்தை நீங்கள் நடத்தியிருந்தால் இது அனைத்தும் தடுக்கப்பட்டிருக்கும்.

2 – ஆண்களுக்கு கால தாமத திருமணத்தால் தவறான செயல்களில் ஈடுபட்டு ஆண் மலட்டுத் தன்மை ஏற்படும்.

3 – பெண்களுக்கு கால தாமத திருமணத்தால் Harmone குறைபாடு ஏற்பட்டு பெண் மலட்டுத் தன்மை ஏற்படும்.

4 – இருவருக்கும் கால தாமத திருமணத்தால் குழந்தை பிறப்பதே குதிரைக்கொம்பாகிவிடும். குழந்தையின்மை ஏற்பட்டு Fertility வாசலில் தவம் கிடக்க வேண்டிய நிலை ஏற்படும்.

5 – ஆண், பெண் இருவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு உடல் ரீதியான பாதிப்புகளாக மாறும்.

இந்த இளைய தலைமுறை என்ன பாவம் செய்ததோ ? இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இவை அனைத்திற்கும் காரணம் உலகவல்லாதிக்க தீயசக்தி என்பதை நீங்கள் அறிவீர்களா ?

திருமண வயதை அதிகமாக தீர்மானித்ததும் அவனே !

படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து Settle ஆன பிறகு திருமணம் என்ற எண்ணத்தை விதைத்ததும் அவனே !

சினிமா சீரியல் மூலம் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தியதும் அவனே !

அளவிற்கு அதிக தாராள மது பானங்களை விநியோகம் செய்வதும் அவனே !

ஆபாச படங்களை இணையத்தில் தாராளமாக உலவ விடுவதும் அவனே !

Android Cell Phone, Face Book, Whats app, Musically போன்ற Social Media க்களுக்கு நம்மை அடிமையாக்கியதும் அவனே !

இதற்கு எல்லாம் பலிகாடானது நம் ஒட்டுமொத்த சமூகம்.

தமிழனை முட்டாளாக்கிய வெள்ளைக்காரன். சொந்தத்திற்குள் திருமணம் செய்வது தான் நல்லது என்பதை எளிமையாக அழகாக விளக்கும் சித்த மருத்துவர் பேசிய காணொளியின் link இதோ

https://m.facebook.com/story.php?story_fbid=1902251083191760&id=100002206598579

சொந்த மகரந்த சேர்க்கை நடைபெறும் நாட்டு விதைகள் தான் வீரியமாக முளைக்கும். இதில் சத்தும் சுவையும் அதிகம். இது தான் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.

செயற்கையாக அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்ற Hybrid விதைகள், மீண்டும் முளைக்காது. இதில் சத்தும் சுவையும் மிகக்குறைவு. விளைப்பொருட்களும் உடல் நலனிற்கு உகந்ததல்ல என்பதும் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

சொந்த இனத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட நாட்டு மாடுகள் தான் வீரியமாக இருக்கும். கலப்பின மாட்டை 50 மீட்டர் ஓடவிட்டு பாருங்கள் செத்துவிடும் என்கிறார். நாட்டு மாடு எவ்வளவு தூரம் ஓடினாலும் திமிர் கொண்டு நிற்கும். இந்த வெயில் காலத்தில் கலப்பின மாடுகள் நிழலில் இருந்தாலும் கூட இளப்பு ஏற்பட்டுகிறது. நாட்டு மாடுகள் உச்சி வெயிலிலும் கம்பீரமாக அசராமல் நிற்கிறது. நாட்டு மாட்டின் பெருமை அனைத்தும் ஐல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தெரியும்.

இதேப்போல் நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் கோழி க்கும் உள்ள வேறுபாடு உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

அனைத்தும் தெரிந்த நீங்கள், இயற்கையாகவே மனிதனுக்கும் இனம் உள்ளது என்பதை எப்பொழுதாவது எண்ணிப்பார்த்துள்ளீர்களா ?

செடிக்கு இனம் உள்ளது !

மாட்டிற்கு இனம் உள்ளது !

கோழிக்கு இனம் உள்ளது !

என்பதெல்லாம் உண்மை என்றால் !

மனிதனுக்கும் இனம் உள்ளது என்பதும் உலகில் யாராலும் மறுக்க முடியாத உண்மை.

எப்படி சொந்த மகரந்த சேர்க்கையில் உருவான நாட்டு விதை வீரியமிக்க நல்ல விதையோ !

எப்படி சொந்த இனத்தில் இனப்பெருக்கம் நடைபெற்று உருவாகும் நாட்டு மாடு வீரியமிக்க நல்ல மாடோ !

எப்படி சொந்த இனத்தில் இனப்பெருக்கம் நடைபெற்று உருவாகும் நாட்டு கோழி நல்லதோ !

அதேப்போல் தான் சொந்தத்திற்குள் திருமணம் செய்து பிறக்கும் குழந்தை வீரியமான, நோய்எதிர்ப்பு சக்தி மிக்க, அனைத்து பரம்பரை திறமைகளும் தன்னகத்தே ஜீன்களில் கொண்ட, புஜபல பராக்கிரம தெய்வீக குழந்தை பிறக்கும் என்பது சத்தியம்.

காய்கனி மட்டும் நாட்டு ரகம் வேண்டும் !

பழங்கள் மட்டும் நாட்டு ரகம் வேண்டும் !

மாடுகளல் மட்டும் நாட்டு மாடு வேண்டும் !

பசும்பால் மட்டும் நாட்டுப்பசும் பால் வேண்டும் !

கோழி மட்டும் நாட்டுக்கோழி வேண்டும் !

ஆனால் திருமணத்திற்கு மட்டும் சொந்தத்தில் பெண்ணோ, ஆணோ வேண்டாமோ ?

வெள்ளைக்காரன் பைத்தியக்காரன் அல்ல, நம்மை தான் அவன் பைத்தியக்காரன் ஆக்கி உள்ளான்.

சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த ராஜராஜ சோழன் தான் வானுயர தஞ்சை பெரிய கோவிலை கட்டி உள்ளார் !

சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த இரண்டாவது சூரிய வர்மன் தான் உலகிலேயே பெரிய கோவிலான கம்போடியா கோவிலை கட்டி உள்ளார் !

சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த கரிகால சோழன் தான் கல்லணையைக்கட்டி உள்ளார் !

சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த நம் முன்னோர்கள் தான் ஆயிரம் மைல் கடலில் பிரம்மாண்ட நாவாயை செலுத்தி வியாபாரம் செய்துள்ளார்கள்.

அவ்வளவு ஏன் சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த உங்கள் அப்பாவால் தான் இன்று நீங்கள் உயிரோடு இக்கட்டுரை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

வெள்ளைக்காரன் சொன்னது உண்மையாக இருந்திருந்தால் இன்று நோய் தாக்கி அனைவரும் இறந்திருப்பார்கள். மனித இனமே இருந்திருக்காது.

உண்மையில் அறிவியல் ரீதியாக அனைத்து உயிர்களும் அந்த அந்த இனத்தில் இனப்பெருக்கம் செய்வது தான் நல்லது. அப்பொழுது தான் வீரியமான தலைமுறை உருவாகும்.

எனவே இது போல் பாலியல் குற்றங்களுக்கு

தன் பிள்ளைகளுக்கு தாமதமாக திருமணம் முடிக்கும் பெற்றோர்களும் ஒரு காரணம் !

ஆபாசப் படங்கள் எளிமையாக இணையத்தில் உலா வந்தும் அதை தடுக்க சொல்லி அரசிற்கு எதையும் வழியுருத்தாத பெரியவர்களும் ஒரு காரணம் !

மக்களை தவறாக வழிநடத்தும் ஆங்கில மருத்துவர்களும் ஒரு காரணம் !

காக்க வேண்டிய மக்களை காக்காமல், உத்தரவுகளுக்கு பணிந்து வேலை செய்யும் காவல்துறையும் ஒரு காரணம் !

காவல்துறை யாரையும் சாராமல், நம் கருப்பு சாமி போல் மண்ணை சார்ந்து தனித்து இயங்கினால், அவர்களுக்கும் வேலை செய்வதில் ஒரு மன திருப்தி ஏற்படும். மனநிறைவுடன் வேலை செய்வார்கள்.

ஆபாச இணையதளங்களை அனுமதித்து எதையும் கண்டும் காணாமல் இருக்கும் இந்நாட்டு அரசும் ஒரு காரணம் !

மது விற்பனையை தாராளமயமாக்கிய மாநில அரசும் ஒரு காரணம் !

*இது போல், நடந்த குற்றங்கள் அனைத்திற்கும் இந்த ஒட்டு மொத்த சமூகமும் காரணமாய் இருக்கிறது.

*குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

*கொலை செய்தவனை விட கொலை செய்யத்தூண்டியவனுக்கே அதிக தண்டனை என்பார்கள்.

*இவர்களை தவறு செய்ய தூண்டிய இச்சமூகத்திற்கு என்ன தண்டனை ? கொடுக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் !

*இக்கட்டுரை படிக்கும் நீங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்கவில்லையா ? உடனே அத்தை பையன், மாமன் பெண்ணை திருமணம் முடித்து வையுங்கள். இவர்கள் இல்லாவிட்டால் சொந்தத்தில் திருமணம் முடித்து வையுங்கள்.

*உலகில் இவர்களைவிட உங்களுக்கு சிறந்த மருமகளோ ! மருமகனோ ! கிடைக்க வாய்ப்பில்லை !

நம்முடைய உண்மையான பலமே
நம் சொந்தங்கள் தான்

~ இரா.மதிவாணன் (rrmathi.blogspot.com)