ஓபிஎஸ்.,ஸை உயர்வாகக் கூறிய ஸ்டாலின்!

Published:

stalin stage - 2026

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

வழக்கம் போல், தர்மம் அதர்மம் என்றெல்லாம் பேசி தங்கள் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்துபவர் முன்னாள் முதல்வரும் இன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.

தாம் அதிமுக.,வில் இருந்து வெளியேற்றப் பட்ட போது, தர்ம யுத்தம் தொடங்கி, தனி அணியாகப் பிரிந்து,  பின்னர் மீண்டும் சேர்ந்தார். தர்ம யுத்தத்தால் தாம் முதல்வர் பதவியை இழந்து, தர்ம யுத்தத்தில் வென்று இப்போது துணை முதல்வர் பதவியைப் பிடித்துள்ளார். தனது தர்ம யுத்தத்துக்கு அவர் கொடுத்த விலை முதல்வர் பதவி என்பது அவர் மீது வைக்கப் படும் கருத்துரை.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அது போன்றே கருத்து வெளியிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தாம் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரங்களில், இது, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கின்ற தேர்தல் என்று கூறி வருகிறார்.

இதனை விமர்சித்துள்ள ஸ்டாலின்,  முதலில் தர்மத்தைப் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தர்ம யுத்தத்தின் விலையை துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்-யிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்… என்று கூறி, துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை கொஞ்சம் உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

 

Related articles

Recent articles

spot_img