ஜெயலலிதா இறப்புக்கு காரணமான ஸ்டாலினை தூக்கிலிடவேண்டும்!: அமைச்சர் கருப்பண்ணன்

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்

karuppannan - 2026

ஜெயலலிதா இறப்பிற்கு காரணமான மு.க.ஸ்டாலினை தூக்கிலிடவேண்டும் என அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளாலும் தேர்தல் பிரசாரங்கள் மிகவும் பரபரப்பாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. வாக்கு சேகரிப்பின்போது, அரசியலையும் கடந்து தனிப்பட்ட முறையிலும், கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் விமர்சனம் செய்து வருவதை யாராலும் தடுக்க முடியாது.

இந்நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் அறிமுகக் கூட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் கருப்பண்ணன், ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டு தண்டனை என்ற பெயரில், அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த கர்நாடகா சிறைக்கு அனுப்பியது கருணாநிதியும், ஸ்டாலினும் தான் என தெரிவித்தார்.

ஜெயலலிதா இறப்புக்குக் காரணமான ஸ்டாலினை தூக்கிலிட வேண்டும் என்று வீரவேசமாகப் பேசியது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.