October 29, 2021, 2:18 am
More

  ARTICLE - SECTIONS

  ஹெச்.ராஜாவை நாடாளுமன்றத்துக்கு வரவேற்கும் 13 காரணங்கள்!

  alagiri raja - 1

  இந்த 13 காரணங்கள்தான் H. ராஜாவினை நாடாளுமன்றம் அழைத்து செல்ல போகிறது சிவகங்கையில் குவிந்த ஆதரவாளர்கள் கூட்டம்.

  சிவகங்கை – தேசத்தை நேசித்த, சிவன் ஆலயமான காளையார்கோவிலை நேசித்த மருதுசகோதரர்கள் வாழ்ந்த புண்ணிய மண். அப்படிப்பட்ட சிவகங்கையர்களின் ஆதரவு ராஜா அவர்களுக்கு பெருகி வருகிறதாம்.

  1.எங்களுக்குத்தான் சரக்கிருக்கு மிடுக்கிருக்கு அதனால் மற்ற சாதி பொண்ணுங்க எல்லாம் எங்களைத் தேடி வருதுங்க”, எனத் தொடர்ந்து அச்சில் பதிவேற்ற முடியாத வார்த்தைகளைப் பேசி இந்து சமூகங்களிடையே ஜாதிக் கலவரங்களுக்கு தூபம் போட்டு வந்த திருமாவளவனை எதிர்த்து குரல் கொடுத்த தமிழகத்தில் முதல் ஆள் H. ராஜா

  2.வன்னியர் குல தெய்வமான திரெளபதி அம்மனை கேவலமாகப் பேசிய பழ.கருப்பையா கண்டித்தவர் இதனால் பல்வேறு முறை பழ கருப்பையா உடன் பிரபுக்களால் வசை சொற்களை சுமந்தார்.

  3.ஆண்டாளை வேசி எனப் பேசிய வைரமுத்துவை அதே பாணியில் பதிலடி கொடுத்து விளாசியவர் H. ராஜா

  4.திமுக தற்போது இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சையாக வாய்திறக்காத செயலிற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் H. ராஜா .

  5.விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம் செல்லத் தடை என்ற சட்டத்தை துடைத்தெறிந்த துணிச்சல்காரர் … இவரது தலைமையில் சிவகங்கை, புதுக்கோட்டையில் பல நூறு ஊர்வலங்களை நடத்தியவர்

  6.இந்து கோயில்களின் வருமானம் இந்துக்களுக்கே என்று சட்டத்தின் மூலம் குரல் கொடுத்தவர் அதுமட்டுமல்லாமல் ஹிந்து உரிமை மீட்பு இயக்கத்தை நடத்தியவர்.

  6.மதமாற்ற பிரச்சாரங்களுக்கு அவர்கள் இடத்திலேயே சென்று எதிர்ப்பு தெரிவித்தவர் அராஜகங்களை வெளிக்கொணர்ந்தவர் அதனால் 6 முறை திமுக ஆட்சியில் சிறை சென்றிருக்கிறார்.

  7.இந்து கடவுள்களை கொச்சைப்படுத்திய சீமானை “இந்துக் கடவுள்களை விமர்சிக்க யாராடா நீ?” என களத்தில் குதித்தவர் அதனால் சீமான் போன்றோர் வாயை அடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  8.ஜல்லிக்கட்டு தடையின்போது தான் வளர்த்த காளையை தடையை மீறி களத்தில் விட்டு தமிழர் திருநாளில் சிவகங்கையில் கெத்து காட்டியவர்.

  9.கல்யாணராமன், ஜெகதீசன் போன்றவர்கள் கைது செய்யப்பட்டதில் முன்னின்று மீட்டவர்.

  10.கும்பகோணம் திருபுவனத்தில் ராமலிங்கம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை உடனே சென்று போராடி குற்றவாளிகளை கைது செய்யக் காரணமானவர். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு பத்தே நாளில் இந்து இயக்கங்கள் மூலமாக ரூ.56 லட்சங்களை திரட்டிக் கொடுத்தவர். இந்தக் கொலை வழக்கை தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்ற அழுத்தம் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  1. இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தை உருவாக்கி ஆலயங்கள், ஆலய நிலங்கள், ஆலய சொத்துக்கள் காக்க போராடி இந்துக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கியவர்…

  2. இந்து சமய அறநிலையத்துறையின் ஊழல்களை உலகறியச் செய்து சிலை கடத்தல் கும்பல் சிறை செல்லும் சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கியவர்…
   திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட், இஸ்லாமிய , கிறிஸ்தவ குற்றவாளிகள், மொழி பிரிவினைவாதிகள் அனைவருக்கும் சரிசமமாக வெளுத்து வாங்கியவர் H ராஜா மட்டுமே.

  இந்த 13 – காரணங்கள்தான் அனைத்து சமூகத்தினரும் சாதி கடந்து தற்போது சிவகங்கையில் ஹெச்.ராஜாவிற்காக களத்தில் இறங்கி இருக்கிறார்கள் எப்படியும் ஒட்டுமொத்த தமிழக ஆதவாளர்களின் எண்ணமும் இதுவாகத்தான் இருக்கும் என்று களத்தில் இறங்கி இருக்கிறார்களா

  – நெல்லை சுரேஷ்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,593FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-