திமுக.,வைப் போல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் ‘ஆட் ஆன்’ ஆகும் விஷயங்கள்!

அடடே... அப்படியா? நகைச்சுவை

onrekalpakkanaledu copy - 2026

தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர், பிரசாரத்துக்குச் சென்றுவிட்டு, அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப் படுவதும், பின்னர் அதில் சேர்க்கப் படுவதும் இப்போதைய பேஷன்! அந்த ஃபேஷனை தற்போது சரியாகச் செய்து கொண்டிருக்கிறது திமுக.,!

திமுக.,வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் அதே நடைமுறையைப் பின்பற்றியிருக்கிறது. நாடே ஆவலுடன் எதிர்பார்த்த திட்டமான, ஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் மாதந்தோறும் இலவசமாக அள்ளி வழங்கும் ‘நாய்’  (NYAY) திட்டத்துடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்தத் தேர்தல் அறிக்கையில் சில அம்சங்கள் விடுபட்டுப் போயிருப்பதாக, சமூக வலைத்தளவாசிகள் சில வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வைத்தனர்.

இதை அடுத்து காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளில் விடுபட்ட அந்த அம்சங்களை சேர்த்து திருத்தப்பட்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.  அவ்வாறு திருத்தப் பட்ட அம்சங்கள் இவை…

  1. வெய்யில் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
  2. மழை தேவையான அளவு பெய்ய ஏற்பாடு செய்யப்படும்.
  3. புயல், சூறாவளி போன்ற சீற்றம் தடுக்கப்படும்.
  4. பூகம்பம், காட்டுத்தீ போன்றவை தடுக்கப்படும்.
  5. கொசுவை முற்றிலும் ஒழிக்க ஏற்பாடு செய்யப்படும்.
  6. பெட்ரோல் விலை பத்து ரூவாய்க்கு கீழ் கொண்டுவரப்படும்.
  7. யாருமே வரி கட்ட தேவையில்லை.
  8. இந்தியா முழுக்க உள்ள அனைத்து நதிகளும் இணைக்கப்படும்.
  9. கட்சத்தீவு மீட்கப்படும்.
  10. தனி ஈழம் அமைக்க இலங்கையிடம் வற்புறுத்தப்படும்.
  11. அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் பத்தாயிரம் வழங்கப்படும்.
  12. அனைவருக்கும் இலவச கேஸ் வழங்கப்படும்.
  13. அனைவருக்கும் இலவச ரயில் சேவை அளிக்கப்படும்.
  14. வீட்டுக்கொருவருக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும்.
  15. ஊழல் இல்லாத ஆட்சி நடத்தப்படும்.
  16. அடுத்த தேர்தல் அறிக்கையில் வறுமை ஒழிப்பு வாக்குறுதி கொடுக்க மாட்டோம்.

எச்சரிக்கை: இது நம் ஒன்றேகால் பக்க நாளேடு! இதில் உள்ளவை உலகியல் நடப்புடன் ஒன்றிப் போனால் நாம் பொறுப்பல்ல! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.