ஆண்டுக்கு 372 நாட்கள், பிப்ரவரி மாதத்தில் 31 நாட்கள்! கல்வித்துறை காலண்டர்!

Published:

World Meteorological Day 1 - 2026ஒரு ஆண்டுக்கு 372 நாட்கள், பிப்ரவரி மாதம் 31 நாட்கள் என்று பஞ்சாப் மாநில கல்வித்துறை வெளியிட் டுள்ள காலண்டரில் அச்சிடப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

பஞ்சாப் மாநில கல்வித்துறை சார்பில் “சமகரா ஷிக்‌ஷா அபியான்” என்ற திட்டத்தின் கீழ் காலண்டர்கள் அச்சிடப்பட்டன.

அதில் 365 நாட்களுக்கு பதிலாக 372 நாட்களும், பிப்ரவரி, ஏப்ரல், ஜுன், செப்டம்பர், நவம்பர் ஆகிய மாதங் களில் 31 நாட்களும் இடம் பெற்றுள்ளன.

இது போன்ற 1000 காலண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவை தனியார் மற்றும் அரசு பள்ளிகளின் சுவரில் இடம்பெற்றுள்ளன.

மான்சா மாவட்ட கல்வி அதிகாரி ராஜின்ந்தர் சிங் இதுகுறித்து கூறும் போது “ அச்சகத்தில் அச்சிட்ட போது இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இந்த காலண்டர்களை திருப்பி அனுப்பும் படி நாங்கள் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கு வதால் அவசர கதியில் இந்த காலண்டர் வெளியிடப் பட்டதாகவும், அரசின் நலத்திட்டங்களை அதில் குறிப்பிட்டுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

Related articles

Recent articles

spot_img