வருமான வரித்துறையில் சிக்கிய ம.பி. முதல்வர் கமல்நாத்! உண்மை என்ன?

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்

kamal nath - 2026

மத்திய பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 281 கோடி வரை கணக்கில் வராத பணம் கைமாறப் பட்டது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

ஞாயிற்றுக் கிழமை வருமான வரித் துறையினர் ம. பி., முதல்வர் கமல்நாத்தின் முன்னாள் தனி செயலாளர் பிரவீன் காக்கர் மற்றும் அவரது ஆலோசகர் ராஜேந்திர குமார் மிக்லானி ஆகியோரது வீடுகளிலும் சோதனைகளை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனை குறித்து வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய பிரதேசத்திலிருந்து ஒரு பகுதி பணம், தில்லியில் இருக்கும் முக்கிய அரசியல் கட்சிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுளது. இதில் ரூ.20 கோடி ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினரின் சோதனையில், கணக்கில் வராத 14.6 கோடி ரூபாய், 252 மதுபான பாட்டில்கள் மற்றும் சில வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் பணப் பரிமாற்றம் குறித்து குறிப்பு எழுதி வைக்கப்பட்டிருந்த டைரி, டைரி, கணினி ஆவணங்களும் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

madhyapradesh it - 2026

சட்ட விரோதமாக சுமார் ரூ. 230 கோடி ரூபாய் வரை பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள், போலி பில்கள் மூலம் ரூ.242 கோடிக்கு மேல் பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்கள், சிக்கியுள்ளன. இதில் 80 நிறுவனங்களின் தொடர்பு இருக்கலாம்… என்று கூறப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.