ஆசனவாயில் வைத்து 66 லட்ம் மதிப்பிலான 2 கிலோ தங்கம் கடத்தல் 4 பேர் கைது…!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் தமிழகம் திருச்சி

GOLD 2 - 2026
திருச்சி விமானநிலையத்தில் சுமார் 2 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் வைத்து கடத்தி வரப்பட்ட 66 லட்சம் மதிப்பிலான 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் மற்றும் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானம் மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த சதாம் உசேன் (36) மற்றும் முஷ்டாக் அலி (38), திருச்சியைச் சேர்ந்த அசாருதீன் (40) ஹிக்மத்துல்லா (39) ஆகிய நான்கு பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களை அழைத்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சதாம் உசேன் முஷ்டாக் அலி, அசாருதீன் ஆகியோர் 1418 கிராம் தங்கத்தை பசை வடிவில் ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்ததது தெரியவந்தது, இதைதொடர்ந்து அவர்களை 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல், ஹிப்மதுல்லா என்பவர் காலணிகளில் மறைத்து எடுத்து வந்த 522.5 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவ்வாறு நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1940 கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 thought on “ஆசனவாயில் வைத்து 66 லட்ம் மதிப்பிலான 2 கிலோ தங்கம் கடத்தல் 4 பேர் கைது…!”

  1. இஸ்லாமிய நண்பர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது. இதுபோன்ற குற்றங்களில் பிடிபடுபவர்கள் ஏன் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள்? உயர்ந்த கோட்பாடுகள் கொண்ட அந்த மார்க்கம் திருடுவதை தடை செய்துள்ளதே? கடத்தல்காரர்கள் அதை ஏன் அறியவில்லை? ஒன்று மட்டும் நிச்சயம். தீவிரவாதம், கடத்தல், சமூக விரோத செயல் போன்ற குற்றங்களை செய்பவர்கள் எந்த மத இன மொழி ஜாதி நாடு சார்ந்தவராகவும் இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு மதம் இனம் என்று சொல்லவே கூடாது. முடியாது. அது தவறும் கூட. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வாதம் இங்கு எடுபடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.