கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…..!

Published:

MENNAL 1 - 2026

இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தொடக்க காலங்களில் வழக்கமாக ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதங்கள் வரையிலான காலத்தில் பீகாரில் மின்னல் தாக்கும் சம்பவங்கள் அதிகமாக ஏற்படுவது உண்டு.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி – மின்னல் தாக்கியதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்,

மேலும் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகல்பூர், பெங்குசாரய், சஹர்சா, பூர்னியா, அராரியா, கத்திஹர், ஜமுயீ, காஹரியா, மத்தியேபுரா, மதுபானி, தர்பங்கா, சிதாமரி, மிதிகரி மற்றும் கயா ஆகய மாவட்டங்களை சேர்ந்தோர் உயிரழந்தாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

. உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img