துாத்துக்குடியில் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு; தமிழிசை பேட்டி……!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் புகார் பெட்டி

tamilisai soundarrajan 1 - 2026

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

பா.ஜனதா கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான மேற்பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் நேற்று நடந்தது.

இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு மாவட்ட மேற்பார்வையாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“நீட்” தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை, குடியரசு தலைவருக்கு அனுப்பிய 4 நாட்களிலேயே விலக்களிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது.

காலதாமதமாக தெரிவிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற, முன்னேறிய சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் தொடர்பாக சிலர் தவறான கருத்தை பரப்புகின்றனர்.

இந்த நடைமுறை ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு சலுகையை பறிக்காது. பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களும் பலனடைய வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும்.

அத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி வேட்புமனுவில், தனது கணவர், மகன் ஆகியோரது வருவாய், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்துள்ளார்.

அதுகுறித்தும், தேர்தல் நடத்தை விதி மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு குறித்தும் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். 2ஜி வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

அந்த வழக்குகளின் விசாரணையின் முடிவில் தூத்துக்குடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.