ஜார்ஜியாவில் கரையொதிங்கிய மூன்று பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்த பரிதாபம்

அடடே... அப்படியா? உலகம்

beach 1 - 2026ஜார்ஜியாவில் கடற்கரையோரம் கரை ஒதுங்கிய 3 திமிங்கலங்கள் உயிரிழந்தன. அங்குள்ள புனித சைமன்ஸ் தீவு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குளிக்கச் சென்றபோது, சுமார் 50 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி கிடந்தன.

இதனைக்கண்ட அங்கிருந்தோர், மேலும் பலரது உதவியுடன் திமிங்கலத்தை மீட்டு மீண்டும் ஆழ்கடலில் விட முயற்சி செய்தனர். இருப்பினும் சில திமிங்கலங்களை கடலுக்குள் மீண்டும் அனுப்புவதற்கும் சிரமம் ஏற்பட்டது.thimangalam e1563538698348 - 2026திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில், கரைஒதுங்கிய திமிங்கலங்களில் 3 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல் நியூசிலாந்தில் கரைஒதுங்கிய 200க்கு மேற்பட்ட பைலட் திமிங்கலங்களில் 145 திமிங்கலங்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.