மாட்டுக்கறி சர்ச்சை குறித்து போலீஸில் புகார் அளித்த இமக., நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் திருச்சி

parthiban nagai hmk - 2026

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் யூனுஸ். இவர் இணையதளத்தில், மாட்டுக்கறி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையிலும், இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், மத மோதல்களைத் தூண்டும் வகையிலும் ஒரு கருத்தினை பதிவிட்டார். இது குறித்து இந்து மக்கள் கட்சியினர் புகார் தெரிவிக்கவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நாகை மாவட்டத்தின் இந்து மக்கள் கட்சி செயலாளர் ஆர்.பார்த்திபன் மீது, நேற்று மத அடிப்படைவாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை அடுத்து இவர் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து உடன் இருந்தவர்கள் கூறிய போது, பல்சர் பைக்கில் வந்த நான்குக்கும் மேற்பட்ட மத அடிப்படைவாதிகள் பார்த்திபன் மீது கடும் தாக்குதல் நடத்தினர். ’உனது கடவுள், எனது உணவு” என்று கூறி, உன் கடவுளான பசுவைக் கொன்று
சாப்பிடுவது எனது உரிமை என்று பேஸ்புக்கில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பார்த்திபன் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினர் அந்த நபர் மீது போலீஸில் புகார் அளித்தார். இதை அடுத்து,  கோபமடைந்த மத அடிப்படைவாதிகள் அவர் மீது  இந்த கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.