தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி; 3 பேர் கைது….!

Published:

trinlan 4 - 2026

பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வடமாநில மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டு இருந்தது.

ரயில் மாக்கினாம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது ரயிலின் சக்கரத்தில் அதிக சத்தத்துடன் உராய்வு ஏற்பட்டுள்ளது.

இதனை கவனித்த ரயிலின் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தி உராய்வு வந்த சக்கரத்தை சோதனை செய்தார்.

அப்போது தண்டவாளத்தில் கல் இருப்பதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு அங்கே இருந்து ரயில் புறப்பட்டது.

இது தொடர்பாக திண்டுக்கல் ரயில்வே டிஎஸ்பி சுப்பிரமணி தலைமையிலான போலீசார் மோப்பநாய்களுடன் ரகசியமாக முகாமிட்டனர்.

அப்போது தண்டவாளத்தில் சந்தேகதுத்துக்கிடமாக சுற்றி இருந்த மூன்று பீகார் மாநிலத்தை போலீசார் கைது செய்தனர்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

அவா்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் குடிபோதையில் கல் வைத்ததாக தெரிய வந்து உள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் மேல் வழக்கு பதிவு செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்து உள்ளனர்.

Related articles

Recent articles

spot_img