cyclone fani odisha2
cyclone

அரபிக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதனால் அங்கு தற்போது புயலாக வலுப்பெற்று வருகிறது.

இது வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

அரபிக்கடலில் நாளை டவ்-தே புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இதனால் அரபிக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு டவ்-தே என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

அரபிக் கடலில் மே 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின்னர் மே 16ஆம் தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புயல் உருவானால் அதற்கு டவ்-தே என பெயரிடப்படும். தக்டே என்பது மியான்மரில் ஒரு வகை பல்லி இனம் என்கிறார்கள். இந்த புயல் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்லும் என்று கணிக்கப்படுகிறது.
.
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் அதி கனமழை பெய்யும்.அதேபோல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் கன முதல் மிகமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குமரி கடல், லட்சத்தீவு, அரபிக்கடல் ஒட்டியுள்ள பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending