
சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் தீவிர உறுப்பினா்கள் சேர்க்கும் முகாம் நிகழ்ச்சி நடந்தது.
நிகழச்சிக்கு, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டையை பயனாளிகளுக்கு வழங்கி வைத்து பேசினார்.
அதனைதொடா்ந்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்திரராஜன்,” கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து பாஜக சார்பில் எடியூரப்பா வெற்றி பெற்ற நிலையில் தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
கத்தி, கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர்.
படித்து பட்டம் வங்க வேண்டியவர்கள் பட்டா கத்தியுடன் படிக்க வருகிறார்கள் ” என்று ரைமிங்காக கூறினார்.



