அத்திவரதப்பா… பக்தியைப் பற்றி பேச ஞான சூனியங்களுக்கு தகுதி இல்லையப்பா!

Published:

sukisivam q - 2026

சுகி சிவம் என்ன பேசுகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் பக்தி என்பது ஒரு விநோதனமான ஒரு உறவு. புரியாத இணைப்பு. அதை யாருக்கும் புரிய வைக்க முடியாது. புரிய வைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

அதனால் தான் இந்து மதத்தில் பக்தி சுவை மிகுந்த படைப்புகள் உள்ளன. இங்கே இருக்கும் சுதந்திரம் எங்கும் இல்லை. பக்தியைப் பற்றி பேசுவதும், பக்தியிலே திளைப்பதும் இரண்டு விதமான எதிர் பாதை.

பக்தியைப் பற்றி பேச ஒரு கூட்டம் தேவை. பக்தி செய்ய, இறைவன் மட்டுமே போதும். பக்தியில் பக்தனே முக்கியம். கடவுள் கல்லில் உள்ளானா, கடவுளை நம்புவன் காட்டு மிராண்டி என்று சொல்பவர்களுக்கு பக்தனின் பக்தியைப் பற்றி ஒன்றும் தெரியாது.

அதனால்தான் இந்து மதத்தில் கடவுள்கள் அதிகம். ஐம்பூதங்களை நம்மால் மட்டுமே வணங்க முடியும். அதனால்தான் இந்துமதம் இயற்கையோடு இணைந்த ஒன்று. இதை நம்புவர்களை மூக்கில் குத்தினாலும், பக்தன் பயப்படப் போவதில்லை.

பக்தியைப் பற்றி பேசினால் பணம் கிடைக்கும். ஆனால் பக்தி வராது. ஆனால் பக்தியை வைத்து பணம் சம்பாதிப்பவர்கள் ஒரு விதமான நடிகர்களே. நடிகர்கள் தமிழ்நாட்டில் என்ன செய்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். பணத்திற்காக வசனம் பேசும் நடிகர்கள், பணத்திற்காக மதம் மாறுகிறார்கள்.

இந்தக் கேவலமான நிலை என்றவாது ஒரு நாள் மாறும். அதற்கு ஒவ்வொருவரின் பக்தி முக்கியம். அசையாத நம்பிக்கை தேவை.

அத்திவரதர் நாற்பது வருடம் கழித்து தரிசனம் தந்தாலும், நாற்பது வருடமாக இந்து மதத்தை எதிர்த்து வியாபாரம் செய்யும் தரமற்ற சில கட்சிகளின், கூட்டத்தின் முகத்திரை கிழிந்தது. அவர்களின் மனைவியே முன்வந்து தரிசனம் செய்தார்கள்.

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

இந்து மதத்தை எதிர்த்து பிரசாரம் செய்யும் ஒரு தமிழ் பேச்சாளர் , அவர் மனைவியுடன் வந்து தரிசனம் செய்தார். அத்திவரதர் எழுந்திற்கவே மாட்டாரா என்று கிண்டல் செய்த ஒரு இந்து மதத்தை மட்டும் கிண்டல் செய்யும் முதகெலும்பு இல்லாத மனிதர் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டு இருக்கும் நிலையில் அவர் குடும்பம் அத்திவரதரை கண்டு வேண்டிக் கொண்டது ஒரு பெரும் திருவிளையாடலே என்று சொல்லலாம்.

வீட்டில் வீரமணியும், ஸ்டாலினும் , நேருவும் இருக்கும் இடத்திலே அந்தக் குடும்பத்திலே இறைவனை வணங்கும் நபர் இருப்பது பெரிய தவம். வீரமணியும், ஸ்டாலினையும், நம்பும் கூட்டம் இருந்தால் அது கூட்டத்தின் தலைவிதி. அதை மாற்ற பா ஜ கே போன்ற அரசியல் கட்சிகள் செய்ய வேண்டும். வீரமணியும், ஸ்டாலினும் மற்ற மதத்திலே இருக்க முடியாது. அங்கே கட்டளை, பாத்வா தான் உண்டு. நம்பிக்கையை யாரும் கேட்க முடியாது. இங்கே வீரமணியும் இருக்கலாம், அவர் வீட்டில் அத்திவரதரை வணங்கும் குடும்ப மக்களும் இருக்கலாம்.

இதுதான் உண்மையான மதம், இதுதான் உண்மையான சுதந்திரம் என்று மக்களுக்குத் தெரிய வேண்டும். வீரமணிக்கு நன்றாகத் தெரியும். இதனால் தான் தன் வீட்டு சுதந்திரத்தில் வீரமணி போன்றவர்கள் தலையிடுவதில்லை. ஆனால் அவர்கள் மத்த வீட்டு சுதந்திரத்தில் தலையிடுவதை நாம் தடுக்கவில்லை. திறந்த வீட்டில் நாய்கள் தான் நுழையும். குற்றம் நம் மீது. வீரமணியும், ஸ்டாலின் போன்றவர்கள் செய்வது அரசியல் வியாபாரம். அவர்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

அவர்கள் பேச்சைக் கேட்டு நாம் நம்ம வீட்டுக் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணடித்தால், குற்றம் நம் மீது. வீரமணி, சீமான், ஸ்டாலின் போன்றவர்களின் வாழ்க்கைத் தரம் நம் கையில் உள்ளது. நம் வீட்டிலே ஒவ்வொருவரும் இவர்களைத் தொடர்ந்து செல்லும் போது, நம் வீட்டுக் குழந்தைகளின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறி.

ஆனால் அவர்களின் வாழ்வு உயர்ந்து விடுகிறது. உயர்ந்த வேகத்திலே அவர்கள் கீழே வரமாட்டார்கள். அவர்கள் கீழே வருவது உறுதி. அவர்கள் கீழே வரும் போது நம் வீட்டில் நிலைமை எங்கோ திசை தெரியாமல் சென்று விடுகிறது. அப்பொழுதுதான், நாம் அத்திவரதரை சென்று வணங்கச் செல்கின்றோம்.

அப்பொழுதான் நாம் நமது மஞ்சக்காமாலையை உணர்கின்றோம். அச்சமயம், வீரமணியும், ஸ்டாலினும், சீமானும் வரப் போவதில்லை. அவர்கள் வாழ்வே, நம் மீது, நம் குழந்தைகளின் மீது நடந்து செல்வதே.

சில பேச்சாளர்கள், சில இசை மேதைகள் பணத்திற்கு விலை போனார்கள். இது இந்து மதத்தில் தான் நடக்கும். ஏனென்றால், இந்து மதம் பக்தியை வளர்க்கிறது. ஆனால் அதை பக்தியை வைத்துப் பணம் செய்யும் மக்கள், அவர்களின் ஆத்மாவினை ஏமாற்ற முடியாது. பணம், புகழ் அனைத்திற்கும் அடிமையாகும் சில பேச்சாளர்கள், சில இசை கலைஞர்கள் செல்லும் பாதையை நாம் தடுக்க முடியாது.

ஏனென்றால் இந்துமதத்தில் கையையும்,நாக்கையும் யாரும் வெட்டுவதில்லை. நாம் வணங்கும் ஆண்டாளைப் பற்றி வசை பாடிய மனிதரை நாம் நாக்கை வேற்றவில்லை. திருப்பதி கோவிலுக்குச் சென்று , அங்கு இருந்த இறைவனை பற்றி இழிவாகப் பேசிய அரசியல்வாதியை நாம் ஒன்றும் செய்யவில்லை.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

நெற்றியிலே கும்குமத்தை அழித்துவிட்டு, வெள்ளைத் தொப்பி போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கும் நாயகனை நாம் நெற்றியில் சூடு வைக்க வில்லை. இந்துமக்களின் முகத்தில் குத்த வேண்டும் என்று சொன்ன ஒரு மத வியாபாரியை நாம் லக்ஷ்மணன் , சூர்ப்பனகையின் மூக்கை உடைத்து போல் செய்து இருக்கலாம். ஆனால் நாம் செய்ய வில்லை.

இதுவே இந்து மதத்தின் பலமும், இந்து மதத்தின் குறைவும். நாம் அவதார புருஷர்கள் வருவார்கள் என்று நின்று கொண்டு இருக்கலாம். இல்லை நம் குழந்தைகள் பாதை மாறிப் போவதைப் பார்த்துக் கொண்டு இருக்கலாம். நாம்தான் முடிவு செய்ய வேண்டும். திறந்த வீட்டில் நாய்கள் புகுந்தால் குற்றம் நம்மீதே. தினமும் புகை பிடித்தால், நோய் வருவது ஐம்பது வயதிற்கு அப்புறம். திராவிடமும், புகை பிடித்தலும் ஒன்று.

வீரமணியும்,ஸ்டாலின், சீமான் போன்றவர்கள் வெறும் தரகர்கள். மதம் மாற்றும் வியாபாரிகள் தான் இவர்களின் முதலாளிகள். மதத் திருடர்கள் இருக்கும் போது , அரசாங்கங்கள் தூங்கும் போதும், அரசியல்வாதிகள் வேறு ஒரு பக்கம் வேண்டு மென்றே பார்த்துக்கொண்டிருக்கும் போதும், நீதிகள் மூன்று குரங்குகள் போன்று உறங்கும் போதும் , நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • பாமரன்

Related articles

Recent articles

spot_img