இன்விடேஷன் இல்லாம இன்குலுட் ஆனாரா ரஜினி ? வலைதள சர்ச்சை !

அடடே... அப்படியா? சற்றுமுன் பொது தகவல்கள்

rajini amith sha - 2026துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியிட்டு விழாவுக்கு அழைக்காமலே ரஜினி சென்றதோடு, ஆர்ட்டிக்கில் 370 குறித்து பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அழைப்பிதழ் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த அழைப்பிதழின்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியிட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

சென்னையில் ஆகஸ்ட் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த புத்தகத்தை வெளியிட்டார். இதில் விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.invitation - 2026இதேபோல் சிறப்பு விருந்தினர்களாக வேளாண்மை விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன், முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே. பராசரன், அப்போலோ மருத்துவமனை சேர்மன் டாக்டர். பி.சி. ரெட்டி, துக்ளக் ஆசிரியர் சுவாமி நாதன் குருமூர்த்தி, விஐடி பல்கலைக்கழக நிறுவனர் ஜி. விஸ்வநாதன் ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

சமூக வலைதளங்களில் பரவிவரும் புத்தக வெளியீட்டு விழா என்று கூறப்படும் அழைப்பிதழில் நடிகர் ரஜினி காந்தின் பெயர் இடம் பெறவில்லை. எனவே ரஜினி காந்த் அழைக்காமலேயே விழாவில் பங்கேற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பலரும் ரஜினி அழைக்காமலேயே சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறி புத்தக வெளியிட்டு விழா அழைப்பிதழை இணைத்துள்ளனர். மேலும் பாஜவின் மீது உள்ள அபிமானம் காரணமாகவே ரஜினி அழைக்காமலேயே சென்று பங்கேற்றதாகவும், அதில் காஷ்மீர் மாநிலத்துக்கான ஆர்ட்டிக்கல் 370 குறித்து பேசியதாகவும் விமர்சித்துள்ளார்கள்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் வரும் தகவல் ரகசியமாக இருந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.