கவலைகள் ஒருபோதும் வெற்றி தருவதில்லை

Published:

hand hand - 2026

ஒருவன், வாழ்க்கையில் தனக்கு மட்டும் வெற்றி கிடைப்பதில்லையே என்று புலம்பிக் கொன்டே இருந்தான்.

பெரியவர் ஒருவர் கூறியதற்க்கேற்ப அவன் ஒரு ஞானியைச் சென்று பார்த்தார். அவனது பிரச்னையைக் கேட்ட ஞானி, மறு நாள் காலையில் அந்த ஊருக்கு அருகில் இருக்கும் மலை உச்சிக்கு வரச் சொன்னார். அந்த மலை உச்சியைச் சுற்றிலும் ஏழு மலைகள் இருந்தன.

அதன் நடுவில் நின்று கொண்டு அவனை ‘நான் தோற்றவன்’ என்று உரக்க கத்தச் சொன்னார். அவன் சொன்னது ஏழு முறை எதிரொலித்தது. பிறகு அந்த ஞானி ‘நான் வெற்றி பெற பிறந்தவன்’ என்று கத்தச் சொன்னார். அவனும் அவ்வாறு செய்ய, திரும்பவும் ஏழு முறை எதிரொலித்தது.

அப்போது ஞானி சொன்னார் “புரிந்து கொள்! நீ எப்படி உன்னை உலகிற்கு வெளிப்படுத்துகிறாயோ, அப்படித்தான் உலகமும் உன்னை பார்க்கிறது. நீ தோல்வியாளனாக வெளிப்படுத்தினால், உலகம் தோல்வியாளனாகவே பார்க்கும். நீ வெற்றி பெறப் பிறந்தவன் என்று சொன்னால், உலகமும் உன்னை அப்படியே பார்க்கும். எனவே, மாற்றம் என்பது உன்னிலிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்” என்றார் .

ஆம்! நாமும் நம்முடைய திறமைகளை ரகசியமாக வைத்துக் கொண்டு உலகம் எனக்கு வாய்ப்பு தரவில்லை என்று புலம்பாமல் முயற்சி செய்து, வாய்ப்புகளைத் தேடித் பெற்று முன்னேற வேண்டும்.

– ராம்குமார் சிங்காரம்

Anything worth having doesn’t come easy…..

Related articles

Recent articles

spot_img