ஹிந்தி தெரியாமல் தவித்தேன்! அஸ்வின் மனக்குமுறல்!

உரத்த சிந்தனை சுய முன்னேற்றம் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

aswin - 2026ரவிச்சந்திரன் அஸ்வின், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்.  திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஹிந்தி மொழி தெரியாததால் தனிமையில் தவித்ததாக கூறினார். இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது, விளையாட செல்லும் ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டே இருப்பேன்.aswin2 - 2026ஹிந்தி எழுதவும், படிக்கவும் தெரிந்த எனக்கு பேசத் தெரியாது. இதனால் விளையாடும் போது பேசுவதற்கு யாருமின்றி தனிமையில் தவித்தேன். வாய்ப்பு என்பது யாரையும் தேடி வராது. நாம் தான் அந்த வாய்ப்பை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.aswin3 - 2026வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.பறவைகள் போல் வானத்தில் பறக்க ஆசைப்பட வேண்டும். ஒரு போதும் இது போதும் என்று இருந்து விடக்கூடாது. இலக்கை தாண்டிய பயணங்களும் நம் வாழ்க்கையில் இருக்கும். எனவே எதற்கும் கவலைப்படாமல் முன்னேறி செல்ல வேண்டும் என பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.