December 6, 2025, 3:57 PM
29.4 C
Chennai

காஞ்சி அத்திவரதர் இன்றைய தரிசனம்!

athivarathr1 horz - 2025

விஷ்ணு காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தரிசனம் அருளும் அத்திவரதர் பெருமாள் இன்னும் இரு நாட்களில் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளப் போகிறார்.

ஜூலை 1ம் தேதி தொடங்கி கடந்த 45 நாட்களாக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதர் பெருமானை தரிசனம் செய்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல் நாளே வந்திருந்து தரிசனத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

அத்திவரதர் பெருமானே, முற்காலத்தில் ஆழ்வார்களாலும், ஆசார்யப் பெருமக்களாலும் போற்றி வணங்கப் பட்ட பெருமாள். அவரே வரம் தரும் வரதராசன் என்றும், பேசும் பெருமாள் என்றும் போற்றப் படுபவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வைணவம் வளர்த்த மகான் ஸ்ரீ ராமானுஜரின் குருவாக இருந்த திருக்கச்சி நம்பிகள், இந்தப் பெருமானுக்குத்தான் ஆலவட்டில் எனும் விசிறி வீசும் கைங்கரியம் செய்து வந்தார் என்றும், அவருடன் இந்தப் பெருமாள் உரையாடுவார் என்றும், இவர் மூலமே ராமானுஜருக்கு புகழ்பெற்ற ஆறுவார்த்தைகளை திருக்கச்சி நம்பிகள் கேட்டுப் பெற்று அறிவித்தார் என்றும் கூறுவர்.

பின்னாளில் ஏதோ காரணங்களால் அனந்தசரஸ் திருக்குளத்துள் எழுந்தருளிய பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளச் செய்து, 48 நாட்கள் ஒரு மண்டலம் அலங்காரம் செய்து தரிசிக்கும் வழக்கம் வந்துள்ளது. இருப்பினும், இந்தப் பெருமாளுக்கு திருவாராதனம் எனப்படும் பூஜைகளோ, வேறு ஆகம பூஜைகளோ கிடையாது. மூலவராக வீற்றிருக்கும் வரதராசருக்கு நிவேதனம் ஆகும் போது, இவருக்கும் நிவேதனம் செய்விக்கப் படுகிறது.

தினந்தோறும் விதவித அலங்காரங்களைச் செய்து, பக்தர்களின் தரிசனத்துக்காக  அத்திவரதர் இங்கே எழுந்தருளியுள்ளார்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் அருளும்  அத்தி வரதரின் இன்றைய 45 ஆம் நாள் (14.08.19) அலங்காரத்தை இங்கே தரிசியுங்கள்…

athivarathar aug14 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories