போலி அத்வைதிகள்: ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
abinav vidhya theerthar 1 - 2026

இளம் மாணவர்களின் கூட்டத்தில் ஒருவர் அத்வைத தத்துவத்தை விளக்கி கூறிக்கொண்டிருந்தார். தமது உபன்யாசத்தில் அவர் உலகம் பொய் என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அப்பொழுது திடீரென அங்கே வந்த காட்டு யானையின் பிளிறல் கேட்டு மாணவர்களும் மற்றவர்களும் நாலா பக்கங்களிலும் சிதறி ஓடினார்கள். துரதிஷ்டவசமாக உபன்யாசம் செய்து கொண்டிருந்தவர் கால் நழுவி பெரிய குழியில் விழுந்து விட்டார். யானை அவ்விடத்திலிருந்து சென்றதும் மாணவர்கள் அவரைத் தேடத் தொடங்கினார்கள். பள்ளத்திலிருந்து உதவி குரல் கொடுத்துக் கொண்டிருந்த வரை மாணவர்கள் ஒருவாறு கண்டுபிடித்தார்கள்.

அவர்கள் அவரைப் பார்த்து தாங்கள் சற்று முன்பு உலகம் பொய் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அப்படி என்றால் யானை துரத்தும் போது எதற்காக பயந்து கொண்டு ஓடினார்கள் என்று கேட்டார்கள். மேலும் உதவிக்காக ஏன் கூச்சலிடுகிறார்கள் என்றும் கேட்டார்கள். பரிதாபமான நிலையில் இருந்த அந்த உபன்யாசம் ஒரு கணம் யோசித்துவிட்டு என்னை இந்த குழியிலிருந்து தூக்கி விடுங்கள் உங்களுக்கு விளக்கம் தருகிறேன் என்று கூறினார்.

மாணவர்கள் அவரை குழியிலிருந்து வெளியேற்றினார்கள். மீண்டும் உரையாற்றும் இடத்திற்கு வந்து சிறிது கூட கூச்சம் இல்லாமல் வெட்கம் இல்லாமல் நான் கூறிய வார்த்தைகளை மறுபடியும் உறுதிப்படுத்துகிறேன். இந்த உலகம் பொய். என்னை துரத்தி வந்த யானை பொய். அதை கண்டு நான் பயந்து ஓடியது பொய். நீங்கள் என்னை காப்பாற்றியது பொய். நான் குரல் கொடுத்தது பொய் என முழங்கினார்.

இவ்விளக்கம் அவர் புத்திசாலித்தனம் என்று நினைத்துக் கொண்டு அவர் உளறலும், மற்றவரை ஏமாற்ற அவர் கையாளும் யுக்தியாகவும் மற்றும் ஒரு பாசாங்குகாரர் என்பதை வெட்ட வெளிச்சமாகிறது.

அவருடைய உண்மை நிலையை அது சிறிதும் மாற்றாது. அவருடைய போலி முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது. மனசாட்சியின் படி நேர்மையாக ஒருவர் நடந்து கொள்ள வேண்டும். கம்பீரமான வார்த்தைகளால் அத்வைத தத்துவத்தை எடுத்துக்கூறி அடுத்தவர்களை ஏமாற்றி விடலாம். ஆனால் அவரது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் அத்தகைய பேச்சுக்களால் அவருக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. இவ்வுலக போகங்களில் பற்று உள்ளவனாய் இருந்து கொண்டு எல்லாம் பிரம்மம் என்று பேசிக் கொண்டிருப்பவன் உண்மையில் கர்மாவில் இருந்தும் பிரம்மத்திலிருந்து விலகியவன் ஆகிறான். அப்படிப்பட்டவனை நீச்சமமானவன் என்று கருதி ஒதுக்கி விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏனென்றால் உண்மை உணர்ந்து முக்தி நிலையை அடைய அவனால் முடியாததால் அவன் பிரம்மத்திலிருந்து வழுவினவனாக கருதப்படுகிறான்.

அப்படிப்பட்ட மனிதன் தன்னை மறந்த ஒரு ஞானி போல் காட்டிக் கொள்வதால் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மாக்களைச் சிரத்தையுடன் செய்ய மாட்டான். ஆகையால் கர்மத்தில் இருந்தும் அவன் வழிவியவன் ஆகிறான். அவர்கள் பேசும் பேச்சும் அவர்களின் பிரம்ம அறிவும், அது இருப்பதாக காட்டிக் கொள்வதும் அவர்களை ஒருபொழுதும் காப்பாற்றப் போவதில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.