spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்செல்வம், வித்தை, ஆயுள் பெற.. ஈஸ்வரன் ந்ருஸிம்ஹரை துதித்து துதி!

செல்வம், வித்தை, ஆயுள் பெற.. ஈஸ்வரன் ந்ருஸிம்ஹரை துதித்து துதி!

narasimhar
narasimhar

ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம்

அற்புதமான இந்த ஸ்லோகம் ஸ்ரீ பரமேஸ்வரனால் ஸ்ரீ பார்வதிக்கு உபதேசம் செய்யப்பட்டது. அளவற்ற சக்தி வாய்ந்தது. ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் பெருமையை விளக்கும் இந்த ஸ்லோகத்தை காலையில் நீராடிய பின்பு மூன்று தடவைகளும், இரவில் படுக்கப் போகும் முன்பு கை கால்களைக் கழுவிக் கொண்டு ஒரு முறையும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். தீர்க்க முடியாது என்று கைவிடப்பட்ட நோய்கள் குணமாகும். கவலைகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். மன நோய்க்கு அரிய மருந்தாகும் இந்த மந்திரராஜபத ஸ்தோத்ரம்.

ஸ்ரீ ஈஸ்வர உவாச –

வ்ருத்தோத்புல்ல விசாலாக்ஷம் விபக்ஷக்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விஸ்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்

  1. வட்டமாக மலர்ந்து விசாலமான கண்களை உடையவரும், எதிரிகளை அழிப்பதில் உறுதியானவரும், பெரிய சப்தத்தால் உலக முழுவதையும் பயமுறுத்தியவருமான உக்கிரமான விஷ்ணு ரூபமுள்ள நரசிம்மனை வணங்குகிறேன்.

ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸுதம்
நகாக்ரை: ஸகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்

  1. எவராலும் கொல்ல முடியாது என்ற வரத்தைப் பெற்றவனும், எல்லா விதமான சக்திகளையும் வரமாகப் பெற்றவனும், கச்யபரின் மனைவியான திதியின் புத்திரனுமான இரண்யகசிபுவை நகங்களின் நுனியால் கீறித் துண்டு துண்டாக்கிய நரசிம்மனை வணங்குகிறேன்.”

பதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தாவிஷ்ட த்ரிவிஷ்டபம்
புஜப்ரவிஷ்டாஷ்ட திஸம் மஹாவிஷ்ணும் நமாம்யஹம்

  1. வாமனனாக வந்து திரிவிக்கிரமனாக வளர்ந்து எந்த மஹா விஷ்ணுவானவர் பாதங்களால் பாதாளம்வரை அளந்து வசப்படுத்திக் கொண்டாரோ, பிறகு தலையால் இந்திர லோகத்துக்குள் புகுந்து கைகளால் எட்டுத் திக்குகளையும் கவர்ந்தாரோ, அந்த விஷ்ணு ஸ்வரூபமான நரசிம்மனை வணங்குகிறேன்.

ஜ்யோதீம்ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீந்யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்

  1. எவருடைய ஒளியின் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அக்னி முதலான பிரகாசிக்கும் பொருள்கள் முறையாகப் பிரகாசிக்கின்றனவோ, ஒளியுடன் கூடிய அந்த மகாவிஷ்ணுவாகிய நரசிம்மனை வணங்குகிறேன்.

ஸர்வேந்த்ரியைரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
ஜாநாதி யோ நமாம்யாத்யம் தமஹம் ஸர்வதோமுகம்

5.இந்திரியங்கள் அற்றவராயினும் எல்லாவவற்றையும், எப்போதும், எங்கும் உள்ளதையும், எவர் அறிகிறாரோ, எல்லாந் திசைககளையும் பார்க்கும் சக்தியுள்ள அந்த விஷ்ணுவை வணங்குகிறேன்

நரவத் ஸிம்ஹவச்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மந:
மஹாஸடம் மஹாதம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்

  1. மனிதன் போலவும், பெரிய பிடரியுடன் கூடிய ஜடையும், பெரிய கோரைப் பற்களும் உடைய சிங்கம் போலவும் வடிவத்தை எடுத்துக்கொண்ட நரசிம்மனை வணங்குகிறேன்.

யந்நாமஸ்மரணாத் பீதா: பூதவேதாள ராக்ஷஸா:
ரோகாத்யாஸ்சப்ரணஸ்யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்

  1. எந்தப் பெயரை நினைத்த மாத்திரத்திலே பூத, பிசாச, வேதாளங்களும், ராக்ஷசர்களும் பயத்தினால் அழிந்து விடுகிறார்களோ எல்லா விதமான வியாதிகளும் நசிந்து விடுகின்றனவோ அந்த பயங்கர உருவம் கொண்ட நரசிம்மரை வணங்குகின்றேன்.

ஸர்வோபி யம் ஸமாஸ்ரித்ய ஸகலம் பத்ரமஸ்நுதே
ஸ்ரியா சபத்ரயா ஜுஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்

8.எல்லோரும் எவரை சரணடைந்து எல்லா
விதமாக மங்களங்ககளையும் பெறுகின்றார்களோ எவர் அருளால் செல்வமும் நன்மையும் பெறுகிறார்களோ, அந்த மங்களகரமான நரசிம்மனை வணங்குகிறேன்.

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் ஸத்ருகணாநபி
பக்தாநாம் நாஸயேத் யஸ்து ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம்

9.பக்தர்களுக்கு எதிரிகளால் உண்டாகும்.
தொல்லைகளையும், கால நியமப்படி உண்டாகும். மரண பயத்தையும் எந்த பகவான் தவிர்க்கின்றாரோ அந்த யமதர்மராஜனையும் அடக்கி ஆள்ன்ற நரசிம்மனை வணங்குகிறேன்.

நமஸ்காராத்மகம் யஸ்மை விதாயாத்ம நிவேதநம்
த்யக்ததுக்கோகிலாந் காமாந் அஸ்நுதே தம் நமாம்யஹம்

10.எந்த பகவானிடம் ஒருவன் தன்னையே அர்ப்பணம் செய்து வணங்குகிறானோ, எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டவனாய் தனது விருப்பங்களனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டவனாகிறான். அப்படிப்பட்ட அந்த நரசிம்மனை வணங்குகிறேன்.

தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மாந:
அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்

11.பரம்பொருளாகிய நரசிம்மனை எல்லா பக்தர்களும் சுயமாகவே சரணடைந்து சேவிக்கிறார்கள் அல்லவா? அது போலவே ஹே நரசிம்மா! நானும் உன்னை சரணடைந்து சேவகன் என்ற பாவனையுடன் வணங்குகிறேன்.

சங்கரேணாதராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வமுத்தமம்
த்ரிஸந்த்யம் ய: படேத் தஸ்ய வித்யாயு: ச்ரீஸ்சவர்ததே

12.பரமேச்வரனால் ஆதரவுடன் நரசிம்மனை துதி செய்யப்பட்ட இந்த உத்தமமான தத்துவங்களுடன் கூடிய ஸ்தோத்திரத்தை “எவனொருவன் மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்கிறானோ அவனுக்குச் செல்வமும் வித்தையும் நீண்ட ஆயுளும் கிடைக்கப் பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe