அம்பிகையை எப்படியெப்படி வழிபட்டால் என்னென்ன கிடைக்கும்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
Bharathi theerthar 1 - 2026

அம்பிகையின் மகிமை – 10

ஐஸ்வர்யம் வேண்டுமென்றால் ஸ்வர்ண (தங்க) வர்ணத்தில் அம்பாளைத் தியானம் செய்ய வேண்டும்.

நீண்ட ஆயுள் வேண்டுமென்றால் ஸஹஸ்ராரத்தில் தியானம் செய்ய வேண்டும்.

(கல்வியும், நாவன்மையும் பெற அம்பாளை எட்டு வர்கங்கள் பொருந்தியவளாகவும், வசினீ போன்ற தேவதைகளால் சூழப்பட்டவளாகவும் சிந்திக்க வேண்டும்.)

‘ வசின்யா’ போன்ற எட்டு தேவதைகள் உள்ளன. அம்பாளின் உபாஸனையைச் சரிவர செய்பவர்களுக்கு இத்தகைய பெயர்கள் தெரியும்.

ஒரே சக்ரத்தில் எட்டு (பெண்) தேவதைகள் அம்பாளுக்கு முன்னும் பின்னும் உள்ளனர். அவர்கள் அம்பாளைப் பூஜை செய்கின்றனர்.

அம்பாள் நடுவில் அமர்ந்துள்ளான். அந்தத் தேவதைகள் அம்பாளுக்குச் சேவை செய்து கொண்டிருக்கின்றனர். இப்படியாக நாம் அம்பாளைச் சிந்திக்க வேண்டும். இதனால் நாம் நன்மையைப் பெறலாம். இவ்வாறு தியானம் செய்தால் படிப்பில்லாதவனுக்குக் கூடப் படிப்பு வந்துவிடும்.

எல்லோருக்கும் அம்பாள் வரத்தைத் தருபவளாக இருக்கின்றாள். மீதி தேவதைகள் வரங்களைத் தருவதற்குத் தயங்கலாம். ஆனால் அம்பாள் தயங்காமல் வரங்களைத் தருகின்றாள். இவ்வாறு பகவதியின் வர்ணனை உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.