தற்கொலையும்.. தன்னம்பிக்கையும்..!

train 1
train 1

ஒரு கால் இல்லாத இளைஞன் பிரபு . அம்மாவுடன் வசித்து வந்தான்.
கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை எப்பொழுதும் வாட்டும்.

ஒரு சமயம், பிரபு, தன் அம்மாவோடு பேருந்தில் போகும்போது பெண்கள் அமரும் சீட்டில் உட்கார்ந்திருந்தான்
ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டினாள்

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் ‘மன்னிப்பு கேட்டாள். அது பிரபுக்குப் பெரிய துயரத்தைத் தந்தது

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடந்தான்

ரயில் வருகிற நேரம்…
ஒரு ‘குஷ்டரோகி’ பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விட்டான்

அந்த குஷ்டரோகி பிரபுவிடம் சொன்னான், “நான் ஒரு குஷ்டரோகி… எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா…
இப்படிதான் ஒரு வாரத்துக்கு முன்னாடிகூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் நான் காப்பாத்தினேன்…

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு எனக்கு நன்றி கூட சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க… ஏனா நான் அவ்வளவு அருவருப்பா இருக்கேன்.

அப்படிப்பட்ட நானே உயிரோட இருக்கும் போது… உனக்கெல்லாம் என்னப்பா தம்பி? இந்த கால் ஊனம் என்ன பெரிய குறையா?…’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு துவங்குகிறான் ஊனமுற்ற பிரபு

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பதை கண்டு
நம் மகன் பிரபுதான் செத்துப்போய் விட்டான் என பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.

அம்மா… நான் இருக்கிறேன் அம்மா…” என பிரபு கத்திக்கொண்டே வருகிறான். ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடந்தான்.

முந்தைய இரவு அந்த குஷ்டரோகி தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் “இப்படிப்பட்ட ஊனமானவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான்.

நாம ஏன் இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..
” என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான் போல…

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான்,
அம்மா…! அந்த குஷ்டரோகி எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்…
நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேனே …!” என கதறி அழுதான் பிரபு .

ஆகவே நாம், நம்மால் முடிந்த வரைக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கூறிய கீதை உபதேசங்களை படித்து, உணர்ந்து, வாழ்ந்து, வாழ வைத்து, நம்மிடையே வாழும் சக மனிதர்களுக்கும் மதிப்பு கொடுத்து, நம் மானிட பிறவியின் அர்த்தம் உணர்வதே நம் வாழ்க்கையின் லட்சியம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories